பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இதிகாசக் கதாவாசகம். கள்” என்று மெதுவாகச் சொன்ஞர்கள். தெய்வயானை, குழந்தைகளே அழைத்து விசாரிக்கத் தொடங்கினுள். அக் குழந்கைகள் மறுமொழி பகர்வதற்கு முன்னமேயே செவி லித்தாய்கள், 'குழந்தைகளே ஒரு முனிவர்.காம் எங்க ளது பிதாவென்று ஏன் சொல்லாமலிருக்கிறீர்கள்?’ என்று குழந்தைகள் மறு மொழி கூறவேண்டிய வகையைக் குறிப் பித்தார்கள். குழந்தைகள் 'ரிஷியும் வேதாத்தியானம் செய்தவருமான ஒரு துவிஜர்தான் எங்களது கந்தை; அவரை எங்கள் காய் மூலமாக அறிக்கோம்” என்ருர்கள். அதற்குத் தெய்வயானை, 'பிள்ளைகளே! உங்கள் பிதாவா கிய அந்தப் பிராமணருக்குப் பெயரும் கோத்திரமும் என்ன? அவர் யார்? எங்கே யிருக்கிருர்? நீங்கள் நல்ல பிள்ளைகள்; உண்மையை உரையுங்கள்' என்று இதமாய்க் கேட்டாள். அதற்குக் குழந்தைகள் அங்கிருக்கும் யயாதி அருகிற் சென்று, 'நாங்கள் சொன்ன எங்கள் தந்தையாகிய அந்த முனிவர் இதோ இருக்கின்ருரே இவர்கான்’ என்று. யயாதியைச் சுட்டிக்காட்டிவிட்டுச் சன்மிஷ்டையினருகிற் சென்று, அவளது முன்தானையைப் பிடித்துக்கொண்டு கின் முர்கள். சன்மிஷ்டை நாணத்தால் கலைகுனிந்து விரலால் மண்ணைக் கிளேத்துக்கொண்டு கின்ருள். யயாதி, குழந்தை கள் தனனேக் காட்டியதைக் கண்டு, ஒன்றும் உரையாது. மெளனமாயிருந்தான். இஃதன்றி வேறென்ன செய்வான்' இச்சமயத்தில் தெய்வயானே கொண்ட கோபத்துக்கும் தக்கத்துக்கும் அளவும் உண்டோ? அவள் சன்மிஷ்டை யைப் பார்க் து, 'அடி கள்ளி, முன்பு நீ குழந்கைகளைப் பெற்ருயென்று கேள்விப்பட்டபோது உன்னே அழைத்து விசாரித்ததற்கு ,ே ஒரு முனி சிரேஷ்டாது அதுக்கிரகத்தி