பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 இதிகாசக் கதாவாசகம். கண்ணுக்குச் சுண்ணும்பும் வைப்பவருண்டோ? இல்ே யல்லவா? ஆதலாற்ருன், அரசர் உன்னிடம் வைத்த அன்புபோல் என்னிடமும் வைத்தார்; இதில் என்ன குற்ற முள்ளது; உனக்கு இவ்வரசர் விஷயத்தில் எவ்வளவு உரிமையுண்டோ அவ்வளவு உரிமை எனக்கும் உண்டு என் பதனை இனிமேலாவது அறிவாயாக’ என்று மிடுக்காய் விடையிஅத்தா ள். இவற்றை யெல்லாம் கேட்ட தெய்வயானை, சித்தாகுல மிகுந்து, வேமுென்றும் சன் மிஷ்டையோடு உரையாட முடி யாதவளாய் அரசனைப் பார்த்து, 'அரசரே! என்ன காரியம் செய்தீர்? உம் குலத்துக்கு மூல புருஷனுகிய சந்திரனுக்கு முன்னமே யிருக்கும் களங்கம் போதாதென்ருே நீரும் இப்போது இக்களங்கத்தைத் தேடியளித்தீர்! கன்ருயிருக் கிறது! ‘கேடுவரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே’ என்றபடி உமது மதியினத்தால் உமக்குப் பெருங் கேட் டைத்தேடிக்கொண்டீர். இனி நான் அரைக்கணமும் இங் குத் தரியேன். இனி நீர் சன்மிஷ்டையோடே சல்லாபிக் திரும்” என்று சொல்லிவிட்டுத் கன் கந்தை வீடு செல் அதற்குப் புறப்பட்டாள். யயாதி ஆ ஆ! என்ன காரியம் செய்தனம் என மனத்தில் மிக்க துயருற்று, கான் செய்த குற்றத்தைப் பொறுக்கும்படி பலபடியாக வேண்டியும், தெய்வயான ஒரே பிடியாய் அதற்குச் செவி கொடாது, சன்மிஷ்டையை எரித்து விடுபவள் போற் பார்த்துவிட்டு, ஆபரண அலங்காரங்களை யெல்லாம் சிதைத் தெறிந்துவிட்டு, கண்லும் கண்ணிருமாய் அழுதுகொண்டு தங்கை யிருப் பிடம் போய்ச் சேர்ந்தாள்.