பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி நாபதி. 3} என்று கூறியபடி ஊழ்வலியாற் செய்யத் தகாதன செயி அம் பின் உணர்ந்து வருந்துகிற நீ, நல்ல நெறியுடையோ னே யாவாய், அதுதாபமுடைய உன் விஷயத்தில் அதுதா பம் கொள்ளவேண்டுவது நியாயமே. எனினும் தான் சபித்துவிட்டாலோ தேவராலும் வேறு யாவராலும் அதனை மாற்றுவது முடியாது. நான் சபித்த நிமிஷமே உன்னே முதுமை மூடிவிட்டதை நீ இப்போது கண்கூடாய்க் காண்கின்ருயல்லவா? ஆயினும் ஒன்று செய்கின்றேன்; உன் மக்களுள் எவரேனும் தம் இளமையைக் கொடுத்து இம் முதுமையை வாங்கிக் கொள்ளலாம்; இஃதன்றி வேறு என்னுல் செய்யலாவது ஒன்றுமில்லை” என்று சொன்னர், யயாதி, சுவாமி, இதுவே போதும், என் மக் களுள் எவனுெருவன் தன் இளைமையைக் கொடுத்து என் முதுமையை வாங்கிக் கொள் கிருனுே அவனே என் ராஜ்ஜி யத்திற்கு அதிபதியாவான்’ எனச் சுக்கிரரிடம் தெரிவித்து விட்டு விடைபெற்று அகன்ருன். சுக்கிரர் சாபத்தால் முதுமையும் பிணியுமுற்று வருக் துகின்ற யயாதி, கன்னுடைய முதுமைப் பருவத்தை மாற் றிக்கொள்ள கினைந்து, தெய்வயானை, சன்மிஷ்டை இருவ ரிடமும் பிறந்த மக்கள் ஐவரையும் அருகில் வரவழைத்தான்; பின் வந்தவர்களுள் மூத்த குமானகிய யது என்பவனேப் பார்த்து 'மகனே! சுக்கிரர் சாபத்தால் என்னை மூப்புப் பிணி பிணித்துக் கொண்டது; நான் இளைமையால் அடை யும் இன்பத்தை முழுதும் அடையவில்லை; இன்னும் சில