பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இதிகாசக் கதாவாசகம். காலம் இளைமையோடே யிருக்கவேண்டுமென்று விரும்பு கின்றேன். எனது மூப்புப் பிணியை வாங்கிக் கொண்டு -- * مه- ه. بگی. . . - * بہت محسر * உன் இன்மையை எனக்குக் கொடு, சில வருடங்கள் கழிந்த பின் உன் இளைமையை உனக்குக் கொடுத்து என் முது மையை நான் வாங்கிக் கொள்கிறேன்.' என்று கேட் டான். அதனேக் கேட்டதும் யது, கங்தையே, உமது கூற்று மிக விந்தையா யிருக்கின்றது; உலகத்தில் கிடைத் தற்கரிய செல்வம் இளைமையினும் வேருென்றில்லை; இதனை இழந்து, ரோமங்கள் நரைத்துத் தோல் திரைந்து, பலங் குன்றித் தளர்ச்சி மிகுந்த, சின் சிண் என்று இறுமி, சிறு வர்களாலும் பெண்களாலும் இவன் யார்? கொண்டு கிழவன் என்று இகழத் தண்டுன்றித் திரியும் முதுமையை எவன் விரும்புவான்? இதற்கு யான் உடன்படேன்’ என்று மறுத்துவிட்டான். இவ்வாறு பது மறுத்துவிடவே, யயாதி 'யதுவே நீ என் இருதயத்தினின்று பிறந்தும் 'கத்தை சொன் மிக்க மந்திரமில்ல' என்பதை மறந்து, என் விருப்பத்தை நிறை. வேற்ற மறுத்துவிட்டாய்; இப்படிப்பட்ட நீயும் உன் சந்ததியும் என் ராஜ்யத்தை அடையாமல் போகக்கடவீர்” என்று சபித்துவிட்டு இரண்டாவது மகளுகிய துர்வசு என்பானை நோக்கி, யயாதி தன் விருப்பத்தை வெளியிட் டான். அவனும் யது போலவே மறுத்துவிட்டான். உடனே யயாதி அவனேயும் “நீ என் ராஜ்ஜியச் செல்வத் துக்கு அருகனுகாது மிலேச்ச தேசத் தரசனவாய்” என்று சபித்தான். பின்பு சன்மிஷ்டை புத்திரர் மூவருள் மூத்த