பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தம மாணவன் கசன். 43 வனத்துக்குப் போயிருந்தபோது அசுரர்கள் அவனே முன் போலவே கொன்று, கடல் நீரில் கலக்கிவிட்டார்கள். பூக் கொய்யச்சென்ற கசன் நெடுநேரம் வரை வரவில்லையாகை யால், தெய்வயானை அதனைத் தன் தந்தையிடம் தெரிவித் தாள். சுக்கிார் முன் போலவே சஞ்சீவினி மந்திரத்தால் அழைத்ததும் கசன் உயிர் பெற்று, எழுந்து வந்து, அசுரர் தன்னை வதைத்துக் கடலில் கலக்கிய செய்தியைத் தெரிவித் தான். அசுரர்கள், இப்படிப் பலமுறை கொன்றும் மீண்டும் மீண்டும் சுக்கிாரால் எழுப்பப்படுகிற கசனைச் சுக்கிார் எழுப் பாமலிருக்கும்படி ஒர் உபாயம் செய்ய எத்தனித்து, இரு நாள் கசன் வனத்துக்குப் பசுமேய்க்கச்சென்றிருந்தபோது அசுரர்கள் அவனைக் கொன்று, அவனது தசைகளேயெல்லாம் பஸ்மமாக்கி மதுவிற் கலந்து சுக்கிரருக்கே கொடுத்துவிட் டார்கள். சுக்கிரும் அதனைப் பருகிவிட்டார். பசு கிரைகள் மட்டும் மீண்டு வந்தன. அதனையறிந்த தெய்வயான முன் போலவே சுக்கிருக்குத் தெரிவித்துக் 'கசனில்லாமல் நான் உயிர் பிழைத்திரேன்” என்று சொன்னுள். சுக்கிார் இவள் உரைக் கதைக்கேட்டதும் கசன் தன் வயிற்றிலிருப்பதை அறியாமல் கசனேக் கூப்பிட்டார். அவன் வாவில்லை; அதனுல், சுக்கிரர் தெய்வயானையைப் பார்த்து "புதல்வீ! கசன இறந்தே போனுன் என்று தெரிகிறது. சம் வித்தையினுல் பலமுறை எழுப்பியும் திரும்பத் திரும்ப இறந்துபோகிறவனுகவே யிருக்கிருன்; இவன் விஷயத்தில் இனி நீ கவலே கொள்ளாதே’ என்று சொன்னுர், தந்தை இவ்வண்ணம் சொன்னவற்றைக் கேட்டதும் தெய்வயானே, "தந்தையே கசன் என்ன சாமானியன? தவ சிரேஷ்ட ாாகிய அங்கிரஸ் மகா முனிவரின் வம்சத்தில் பிறங்