பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தம மாணவன் கசன், Ši கேசிப்பேனே அவர்கட்குப் பயன்படுமன்முே? அதுவே போதும்” என்று உத்தம குணம் வாய்ந்த கசன் தெய்வ யானையை நோக்கிக் கூறிவிட்டு அப்போதே புறப்பட்டுச் சுவர்க்கலோகம் போய்ச் சேர்ந்தான். கசன் வந்ததை யறிந்த இந்திராதி தேவர்கள் எதிர் சென்றுபசரித்து வரவேற்று மகிழ்ந்தார்கள். பின்பு கசன் காரியசித்தியோடு வந்ததை யறிந்ததும் அவர்கள், கரை காண அரிதான உவகைக் கடலுள் மூழ்கிக் கசனே நோக்கி "ஜய ,ே எங்களுக்கு வேண்டிய அரும் பெருங் காரியத் கைச் செய்து முடித்து வந்தமையின் உனது கீர்த்தி இவ் வுலகத்தில் என்றும் கின்று நிலவும்” என்று வாயாரப் போற் றிப் புகழ்ந்தார்கள். பின்பு கசன் தான் கற்று வந்த சஞ் சீவினி மத்திரத்தை முறைப்படி தேவர்களுக்குக் கற்பித் தான். அவர்களும் அதனேக் கற்றுக் காரிய அதுகூலமுற் அறுத் துன்பமற்று இன்பம் பெற்று இனிதாய் வாழ்ந் திருந்தனர்.