பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#_j 严 கதி த் அதி. (ஊழின் வலி) சந்திர குலத்தரசருள் வில்லுக்கு விஜயன் என்னும் சொல்லுக்கு இலக்கான அர்ச்சுனனுக்குக் கண்ணபிரா னது தங்கை சுமித்திரை வயிற்றில் தோன்றியவன் அபி மன்யு என்னும் அரசர் பெருக்ககை. இவன் விராட ராஜன் புத்திரி உத்தரை என்பவளே மணந்து வாழ்ந்து வந்தான். அபிமன்யு அக்காலத்தில் நடந்த பாரத யுத்தக் தில் உயிர்துறந்தான். கருவுற்றிருந்த உத்தரை பூரண கர்ப் பிணியாவதற்கு முன்னரே அகாலத்தில் ஒரு பிள்ளையைப் பெற்ருள். அக்குழவி பிறக்கும்பொழுதே இறந்து பிறந்தது. இதனைத் தெரிந்த கண்ணபிரான், அக்குழக் தையை அபிமன்யு பாட்டியாகிய குக்திதேவியின் மடிமீது வைத்து இக் குழந்தையைப் பிழைப்பிக்கிறேன்' என்று சொல்லிக் தன் காவின் கட்டை விரலால் தொட்டார். அவ்வளவில் அக்குழந்தை உயிர் பெற்று விளங்கிற்று. பின்பு, குலமெல்லாம் பரீrணம் (அழிவு) அடைந்த பின் பிறந்தபடியால், அப் பிள்ளைக்குப் பரீக்ஷித்து ரிட்டார்கள். பரீகதித்து வளர்ந்து அரசர்க்குரிய கலைக ளனைத்தையும் முற்றக் கற்றுச் சிறந்த மதி மாண்புடன் விளங்கி அரசியல் பெற்று, அஸ்தினபுரத்தைத் தம் முன் ஞோன உதிட்டிசன் முதலியோர் போல நெறி தவருது எனப் பெய. செங்கோலோச்சிவந்தான்.