பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இதிகாசக் கதாவாசகம். கிருக்கிருய்? குழந்தாய்! வா”என்று அழைத்தார். அகனக் கேட்ட மாத்திரத்தில் ஆருணி 'சுவாமியே! அடியேன் இங் கிருக்கிறேன்” என்று சொல்லி எழுந்து முனிவரருகில் வந்து'கட்டளைப்படியே கழனிமடையைக் கட்டுதற்கு மிக முய ன்றும் முடியவில்லை; பின் ஜல முழுதும் வெளிப்போவதால் மடையிலேயே படுத்துக் கொண்டிருந்தேன்; இப்போது சுவாமிகள் அழைத்தமையால் எழுந் துவங்கேன்' என்று சொல்வி நமஸ்கரித்துக் குரு மூர்த்திகள் இனி இடுங் கட் டளை எதுவோ அதனைச் செய்யச் சித்தமாய் இருக்கிறேன்.” என்ருன். இவற்றை யெல்லாம் கேட்ட தவுமியர் அவன் மீது அன்பு மிகுந்து அவனே.நோக்கி, ‘அன்ப உபாத்தி யாயர் கழனி மடையை அடைப்பதற்கு இட்ட கட்டளே யை நீ இவ்வண்ணம் வகித்த ஞாபகம் என்றுமிருப்பதற். காக நீ இது முதல் உத்தாலகன் என்னும் நாமக்கையடை யக்கடவாய்' (உத்தாலகன்-மடையைப் பிளக்கிறவன்) உனக்குள்ள குருபத்தி விசேடத்தால் நீ எல்லா தர்ம சாஸ் திாங்களேயும் வேதங்களையும் தெளிந்து ஞானபாதுவாய் விளங்குவாய்' என்று ஆசீர்வதித்தார். பின்பு குருவின் அருளே நிரம்பப் பெற்ற ஆருணி, குருவினிடம் விடை பெற்றுத் தன்னிருப்பிடம் சென்று கிருகஸ்தாச்சிரமத்திற் புகுந்தான். இது நடந்த சின்னுளின் பின்னர் அயோத கவுமியர் மற்ருெரு மாணவனுகிய உபமங்யுவைப் பார்த்து 'அன் பனே! நீ தினந்தோறும் பசுக்களை மேய்த்து வருக” என்று