பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இதிகாசக் கதாவாசகம். டிக் குதித்து, யாதொரு கஷ்டமுமின்றி எழுந்து வந்தான். அதல்ை அப்போதும் துரியோதனன் செய்த அக் தீய சூழ்ச்சி பயனற்றதாயிற்று. அதன்மேல் துரியோதனன் மற்றுமொருமுறை பீமனை அவனது சகோதரர்களினின் ஆறும் தனியே பிரித்துச் சிற்றுண்டி உண்டு களிக்கலாம்' என்று ஒர் சோலைக்கு அழைத்துச்சென்று உண்டிகளில் முன்போலவே காளகூட விஷத்தை மிகுதியாக இட்டு வைத்துப் பீமன உண்ணும்படி செய்தான். உண்டு கொண்டிருக்கும்போதே பீமன் அறிவழிந்து மயங்கினன். அப்போது துரியோதனன், விடத்தினுல் அறிவழிந்த பீம னைத் திடத்தினுற் சிறந்த கிங்கரர்களைக்கொண்டு வடத் தினம் பிணித்துக் கங்கையின் வெள்ளத்திடத்திலே வீழ்த் தும்படி செய்தான். வெள்ளத்துள் வீழ்த்தப்பட்ட பீமன், பிலத்துவான வழியாய்ப் பாதாள உலகிற்போய் வீழ்ந்தான். வீழலும் அவ்வுலகில் வசிக்கும் நாகர்களது குட்டிகள், கட் டுண்டபடி வீழ்ந்த பீமனைச் சூழ்ந்துகொண்டு தங்களது கூரிய பற்களால் கடித்ததன; கடித்தலும் முன் அவன அடம்பிற் பட்டிருந்த விஷம் பின் நாகக்குட்டிகள் கடித்த விஷம் படுதலும் முழுதும் நீங்கிவிட்டது. அதனுல் பீமன் தெளிவுற்றுத் தன்னைப் பிணித்திருந்த வடங்களை அறுத் துக்கொண்டு பால சூரியன்போல் ஒளியுடன் விளங்கிஞன். பின்பு புதியளுகிய பீமனது வரவை அறிந்த நாகர் தலைவ ஞகிய வாசுகி, அவனே அழைத்துவரச் செய்து, தங்களுக்கு முக்கிய உணவாகிய வாயுவின் புத்திரனென்பதைத் தெரிந்து, அவனது விடக்களைப்புவிடப் பத்துக்குட அமிர் தத்தைக் கொடுத்து உண்னும்படி செய்தான். பீமன் அமிர்த குடங்களே உண்டவுடன் கோடை வெயிலால் வாடிய