பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இதிகாசக கதாவாசகம். வஞ்சகக் கருத்ே காடு புரோசனனைக் கொண்டு கட்டி முடித் திருக்கும் இரகசியத்தையும், அம் மாளிகை கட்டிய காலத் தில் கான், ஒருவரு மறியாவண்ணம் விதுரன் எவலால் சுரங்கம் அமைத்து வைத்திருப்பதையும் தெரிவித்து, 'அச் சுரங்கம் கானகம் வரை சென்று முடியும்படிசெய்து, வைத் திருக்கிறேன்; அச்சு:சங்கத்தை ஒருவரும் தெரிந்து கொள் ளாமலிருத்தற்கு ஒரு பெரிய துணையும் அதன்மேல் காட்டி மறைத்து வைத்துள்ளேன்; அதனை உன்னுல் மட்டுமே பிடுங்க முடியும்; ஆதலால் உங்களுக்கு ஆபத்துற்ற காலக் தில் தாணப் பிடுங்கி அவ்வழியாகப் புகுந்து, காட்டுக்குட் சென்று தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிமுடித் தான். இவற்றையெல்லாம் கேட்ட பீமன், அவன் செய்த நன்றியை வியந்து, அந்நன்றியறிதலுக் கறிகுறியாக மிகுந்த திரவியங்களை அவனுக்குக் கொடுத்து, முகம உரைத்த அனுப்பிவிட்டு அன்று முதல் புரோசனன் என்னும் தீ மந்திரி இம்மாளிகையில் என்று தீக்கொளுவு வானே? என்று அதனையே கருத்தாகக் கவனித்துக் கொண்டிருந்தான். சில நாள் கழிந்ததும் பீமன் புரோசனன் இம் மாளி கையில் தீ இடுவதை நாம் குறிகொண்டு பார்த்துக் கொண் டிருப்பதை விட, தாமே அவனுக்குமுன் ஆபத்துக்கிடமா யுள்ள இம்மாளிகையை அக்கினிக்கிரையாக்கி விடுவது நலம் என்று சிந்தித்தான். அதன்மேல் ஒரு நாள் புரோ சனனே அரசியற் காரியங்களைப்பற்றி உசாவுதற்கு அழைப் பான்போல் அழைத்து, நீண்ட நேரம் அவளுேடு பேசிக் கொண்டிருந்து, அவனே அவ்விடத்திலேயே துயிலும்படி