பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 94 செய்து, சகோதரர்களோடு கானும் தூங்குபவன் போல் காட்டி விழித்துக்கொண்டே யிருந்தான். புரோசனன் அயர்ந்து கித்திரை போகும் சமயம் பார்த்துப் பீமன், அாக்குமாளிகையைத் தன் கங்தை தோழனுகிய அக்கினிக் குக் கொடுத்துவிடக் கருதி, நடு கிசியில் அரக்கு மாளி கையின் வாயிலிலும், நாற்புறங்களிலும் தீயைக் கொளுத்தி விட்டுச் சுரங்கத்தை மறைத்திருந்த துணைப்பிடுங்கித்தள்ளி விட்டுத் தாயையும், சகோதரர்களையும் தோளிலும் முது கிலும் கைகளிலும் தாக்கிக்கொண்டு, விரைந்து சுரங்கத்திற். புகுந்து, வாயு வேகம் மனே வேகமாய் வனத்தையடைந்து மரங்களெல்லாம் தான் செல்லும் வேகத்தினுல் முறித்து விழும்படி அதிவேகமாகச் சென் முன், அரக்கு மாளிகையை, அக்கினி இடி யிடித்ததுபோல் வெடிபடச் சிரித்தெழுந்து, எரித்துச் சாம்பராக்கினன். ஊரினர் எல்லாம் அது தெரிந்து, 'அந்தோ தம்பியின் பிள்ளைகள் என்பதையும் பாராமல் அவர்களை வஞ்சனேயால் கொன்ற திருதாாட்டிர னது கன்னெஞ்சை என்னென்று கூறுவது? அவனது கண்போல புத்தியும் குருடாயிற்றே ஆ ஆ! பாண்டவர்கள் எரித்தார்களே!” என்று பலவாறு புலம்பி அக்கினி ப நிதி யெரியும் அரக்கு மாளிகையின் நாற்புறத்திலும் சுற்றிச் சுற்றி ஓடிவந்தார்கள். வனத்தை அடைந்த பாண்டவர்கள் சிறிது தாாஞ் சென்றதும் கங்கையாற்றின் கரையைச் சேர்ந்தார்கள். அாக்குமாளிகையினின்றும் கப்பித்து வரும் பாண்டவர்