பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: 26

முத்துவின் வீடு , உச்சி வேளை,

சீமான் வையாபுரி, பவளக்கொடி, முத்துவின் பெற்றேர்களான அருணு சலச் சேர்வை-பொன்னம்மா ஆகி யோர், முற்றத்திலே விரிக்கப்பட்டிருந்த சிங்கப்பூர்ப் பாயில் உட்கார்ந்திருக்கிறார் கள். பவளக்கொடி - முத்து திரு மணத்தை நடத்தி வைப்பதில் தீவிரமாக முனைந்திருக்கின்றனர் :

வையாபுரி 8 (பரிவுசூழ) அக்கா ! நம்ப முத்துவை

நினைச்சால், பவளத்துக்கு மட்டுமல்லே, . எனக்கும்தான் கவலையாய் இருக்குது. உள்ளங் கையிலே இனிக்கிற மல்கோவா மாம்பழத்தை வச்சுக்கிட்டு, கசந்து தீர்க்கிற எட்டிக்காயைச் சுத்திக்கிட்டு, அலைஞ்சுக்கிட்டு இருக்குதே என் அருமை பெருமையான மாப்பிள்ளை முத்து?

பொன்னம்மா (தயவாக) தம்பி, இளங்கன்று பயம் அறியாதின்னு சொல்றதில்லையா?-முத்து சின்னப்பிள்ளைதானே? ஊர் உலகம் புரி யல்லே இந்தத் தை கடைசிலே, நம்ப திட்டப்