பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளுசலம்:

முத்து (ஆ

14

முத்து ! உனக்கு எப்பவுமே இரக்க மனசு ; அதனுலேதான், புறம்போக்குக் கழுதைங்க ளோட சுயரூபம் தெரியாமல், பதட்டப்படுறே : பச்சாதாபப்படுறே ! ஆளு, உன்னுேட இந்த வெறும் அனுதாபத்துக்குள்ளே, இந்த மாங் குடி கிராமமோ, இல்லாட்டி இந்த ஊர்ச் சமு தாயமோ கட்டுப்பட்டு அடங்கி முடங்கிக் கிடந் திடும்னு நீ மனப்பால் குடிக்கிறியாடா தம்பி, முத்து ?-அப்படி இருந்தால், நான் சொல்லப் போற இந்தத் தாக்கல் தகவலை மட்டும் மனசிலே முடிச்சுப்போட்டு வச்சுக்க; உன்னேட வெறும் அனுதாபம் செல்லாக்காசுக்குச் சமம் 1 -ஆமா, நினைப்பு வச்சுக்க, முத்து !

செல்லாக் காசு ஒன்றைத் தூக்கி வீசு கிறார் சேர்வை.

வேசமாக) அப்பா செல்லாக் காசு உப்புப் புளிக்கு உதவாமல் இருக்கலாம். ஆணு, என் ளுேட அனுதாபம் நியாயமானதின்னு என் மனச்சாட்சி சொல்லுது. பூரணியைப் பெற்ற அபலை மீனுட்சி பேரிலே நீங்க வீண் பழி சுமத்தி ஊரோடே ஒத்து வாழத் துணிஞ்

சிட்டிங்களா ? சொல்லுங்கப்பா, சொல்லுங்க !

அருளுசலம் :

(கேலியுடன்) அப்பனே முத்து ! நான் சொல் றது இருக்கட்டும். முதலிலே நீ சொல்லு: அந் தப் பழிகாரி மீனுட்சி நாலு குண்டுமணித் தாலி யைக் காட்டி இந்த ஊர்ச் சனங்களையெல்லாம் காலம் காலமாய் ஏய்ச்சுக்கிட்டே இருப்பாளாம்!

அவ பேச்சை வேதவாக்காய் மதிச்சு நாங்க லெல்லாம் வாயைக் கட்டிக்கிட்டு இருக்க

வேணுமாக்கும் ? .