பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

மீனுட்சி ே

வையாபுரி ே

187

(ஆவேசமாக) இல்லாட்டியும், நான் இந்தக் குடிசையிலேயேதான் இருந்துக்கிட்டிருப்பேன்! ...என் பேரிலே சுமந்திருக்கிற அநியாயப் பழி கழியறவரைக்கும், நானும் என் மகள் பூரணி யும் இந்த மண்ணிலே, இந்தக் குடிசை யிலேயே தான் இருந்துகிட்டிருப்போம் ! ஆமா, வெட்டு ஒனணு, துண்டு ரெண்டான சங்கதி யாக்கும் இது !

(வைராக்கியமாக) என் பேச்சைத் தட்டிப்புட்டு, எனக்கு எதிரியாய் நீயும் உன் மகளும் இந்த ஊரிலேயே-இந்தக் குடிசையிலேயே இருந் திட்டால் மட்டும், உன் மேலே யுள்ள பழி நீங்கிடுமா?-இல்லே, அந்தப் பழி பாவத்தை, நான்தான் மனமிரங்கித் துடைச்சிடுவேளு?

(நம்பிக்கையுடன்) இன்றைக்கு இல்லாட்டியும், என்றைக்காச்சும் ஒருநாள் நீங்களே மனசிரங்கி என் மேலேயுள்ள வீண்பழியை-அ து வு ம், உங்களோட துரோகத்தினலே என் நெஞ்சிலே விழுந்திட்ட அந்த வீண் அபவாதப் பழியை துடைச்செறிய மாட்டீங்களான் னு ஒரு நப்பாசையிணுலேதான் நான் இந்தப் பாழும் உயிரை இந்தப் பதினுறு வருசமாய்ச் சுமக்க முடியாமல், சுமந்துக் கிட்டிருக்கேனுங்க, அத்தான் !

மீனுட்சி விம்முகிருள் ! சோக இசை சுருதி கூட்டுகிறது !

(சிரித்தபடி) ஒகோ?...என்னை - ஊருக்கு மத்தியிலே உயர்ந்து, தலைநிமிர்ந்து நின்னுக் கிட்டிருக்கிற என்ளை, உயிரோடவே கொன்னு, என் மானம் மரியாதையைப் பழிக்குப் பழியாக