பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

காட்சி: 31

வையாபுரியின் வீடு; அதே இரவு; சாமம்.

சிங்கப்பூர்ச் சீமான் வையாபுரிச் சேர்வை இரண்டாம் கட்டில் குறிச்சியில் சாய்ந்து கிடக்கிறார், மங்கல் ஒளி; மின் விசிறி யும் வேப்பங்கன்றும் வெண்சாமரம் வீசுகின்றன ; ஆல்ை, அவருடைய காவற்பழக் கண்களினின்றும் சுடுநீர் ஆடிப்புனலாக ஒடிக்கொண்டேயிருக் யிருக்கிறது : சுயப்பிரக்கினை கொண்டு, மீண்டும் ஒருதரம் சமாதானம் செய்து பார்க்க, மகளை நாடி விரைகிறார், தேடி நடக்கிறர்.

(தேம்பிக் கூவி) பவளம் !... அன்பான மகளே பவளக்கொடி ...கருமனியே, பவளம் !...

முகப்பு, கடை, பின்கட்டு, தாழ்வாரம், அடுப்பங்கரை எங்கும் தேடிவிட்டார் சீமான். பவளக்கொடியைக் காணுேம் ! பதற்றமும் பரிதவிப்பும் கொண்டு, பைத்தியம் பிடித்தவராக மகளைக்