பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221


அக்கா மகன் முத்துவுக்கும் விடிஞ்சால் கலியாணம் நடக்கப் போகுதாக்கும் 1.ஆன படியினலே, நீ இப்பவே-இந்த நிமிஷத்தி லேயே ஒரு காரியம் செஞ்சாகனும் !-பவளம் சுரனைத் தப்பித் துரங்கிக்கிட்டிருக்குது; சரி யாகக் கேட்டுக்க சங்கதியை - வேலா!... ஊருக்கு எல்லையிலே இன்னமும் உயிர் தறிச் சிருக்கிற அந்தத் தேவடியாள் சிறுக்கி மீனுட்சி யையும் அவளோட அவமானச் சின்னமான அவள் மகள் பூரணிக் குட்டியையும் எச்சில் து ப் பி க் காய்கிறதுக்குன்ளே கூண்டோட கைலாசத்துக்கு அனுப்பிச்சாக வேணும் ! ஆகச்சே, இப்பவே அங்காலே ஒடி ஒளிஞ் சிருந்து, இருட்டுச் சாமத்தின சாமத்திலே, சமயம் பார்த்து, மீனுட்சியும் பூரணியும் அசந்து தூங்கிக்கிட்டு இருக்கிற அந்தவேளை தப்பின நேரத்திலே, மீனாட்சியோட குடிசைக்குத் தி வச்சுப்பிட்டு, மூணும் பேருக்குத் தெரியாமல், நவியாமல் நழுவி எங்காச்சும் ஒடிப் போயிட்டு, பொறகாலே மறுகி இங்கி ட் டு வந்து, என்கிட்டே அந்த நல்ல தாக்கலைப் போட்டுப் பிடுடா, வேலா!...ஊம், இந்தா, அனுமத்து அச்சாரம் l-ரூவா பத்து இருக்கு; அசல் தாளாக்கும். பாக்கியை விடியட்டும் வநது வாங்கிக்கலாம்!-இந்தக் காரியத்திலே ஒசடக்கு ஏதானும் ஏற்பட்டுச்சோ, அப்பாலே உன் தலையையே வாங்கிப்பிடுவேன் ...ஜாக்கிரதை 1 ...ம்...ஒடுடா !

இசையின் பர பர ப் பு பயங்கரமாக எழுந்து, அடங்குகிறது !.