பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/225

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222


அருளுசலம் ே(வீரத்துடன்) டேய், வேலா ! எங்க சீமான் மச்சானுேட சாண் அளவு நெஞ்சின் மானமே அந்த அபாக்கியவதி மீனுட்சியோட எட்டு அடிக் குச்சிலேதான் ஊசலாடிக்கிட்டு இருக் குது !...நீ செய்யப்போற இந்த நல்ல காரியம் கைகூட, எங்க மச்சான்காரருக்குப் பிடித்தமான சாமிபூதம் ஏதாச்சும் மிஞ்சியிகந்தால், அது தான் உ க் கு க் கைகொடுக்க வேணும் ! சரிதாண்டா, ஒடுடாலே, வேலா !

வேலன் மீசையும் கிருதாவும் இருட்டில் சிரிக்கத் தலையை அழுத்தமாக ஆட்டிக் கொண்டே, அச்சார்த்தை சாயக் கிழிசல் துணியில் முடிந்தவாறு, இடுப்பில் செருகியிருந்த வீச்சரிவாள் ரகசியமாகப் பளபளக்கப் புறப்படுகிருன் !...

பவளக்கொடி வெகு ரகசியமாகவும், மிக விழிப்புணர்ச்சியோடும் அங்கிருந்து வெளியேறிப் பாய்ந்து, தன்னுடைய பள்ளி அறையில் பள்ளி கொள்கிருள்!... எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த அருளுசலத் தேவரை முதுகில் தட்டுகிறார் ைவ ய ா புரி ச் சேர்வை.

அருணுசலத்தின் குடுமி, அதிர்ச்சியில் அவிழ்ந்து பறக்கிறது.

அருளுசலம் ே (கலவரத்துடன்) வலிக்குது, மச்சான் !