பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்குயி ே

சின்னம்மா ே

சாம்பான் :

236

திலே தொண்ணுறு தொலைக் கல்லைத் தாண்டி வந்திட்ட நான் அறிஞ்ச மட்டும் இந்த மாதிரி யான ஒரு அநியாயக் கொடுமை நடந்ததாகக் கேள்விப்பட்டதே இ ல் லை ேய | கொல்லுக் கொலைக்கு அஞ்சாத எந்தக் கல்லு நெஞ்சக்காரப் படுபாவி, ராத்திரியோட ராத்திரியாய் இந்த ஒலைக் குடிசைக்குத் தி வச்சு, நம்ப மீனுட்சி அக்காளையும் அக்கா மகள் பூரணியையும் கூட்டோட கைலாசத்துக்கு அனுப்பிச்சிப்புட் டானே ?- சாமியாவது, பூதமாவது ?- நம்ம மீனுட்சி அக்கா நொடிக்கு நூறுதரம் கொஞ்ச நாளாய்ச் செப்பி வந்தாப்பிலே, ஆத்தா மகமாயி தெய்வம் இல்லை; வெறும் கல்லேதான் ! காளி கல்லாகவே இருக்கிற துப்பைப் புரிஞ்சுக் கிட்டதாலேதான், அந்தப் போகுடிப்பாவி இந்த அடாத அநியாயத் தீவினைப் பாவத்தை மனம் துணிஞ்சு செய்ய மனம் துணிஞ் சிருக்கான் !... -

(தேம்பியபடி) ஆயா, ஆத்தா மூத்தவளை அப்படியெல்லாம் தப்புத்தனமாய்ப் புள் ளி போட்டு, எடைபோட்டுப்புடலாமா ? வினை விதைச்சவனை அந்தப் பயங்கரி காளி வினை அறுக்கி வைக்காமல் தப்பவிடவே மாட்டாள் !

(கதறியவாறு) மனித சாதிக்கு மையத்திலே, காளியே ஒரு பெண் சென்மமாய் அவதாரம் எடுத்ததாட்டம் தப்பிப் பொறந்த நம்ப மீனுட்சி அக்காளையும் அதோட பொண்ணையும் இனி எப் பொறப்பிலே நாம காணக் கொடுத்து வைக்கப் போருேமோ ?

ஒரு பாவமும் அறியாது, ஆளு, எல்லாப் பாவத்தையும் மண்டையிலே போட்டுச் சுமந்து