பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி :

மீனாட்சி :

பூரணி :

மீட்ைசி ;

பூரணி :

மீனுட்சி :

பூரணி :

2f

ஊர்ச்சனங்க ஒட்டுக்கும் நம்பளைப் பள்ளுப் பறைக்கும் கேடாய் மதிச்சு, நம்மளேக் கண்டடி யும் பேயைக் கண்டது கணக்கிலே அரண்டு மிரளும்படி, அப்படி நாம் என்னதான் பொல் லாத பாவத்தைப் பண்ணிப் பூட்டோமாம் ?

ஈரம் இல்லாத இந்த மண்ணிலே-இதயம் இல்லாத சனங்களுக்கு மத்தியிலே, நாம ஏழை பாழைங்களாய்ப் பிறந்த அந்த ஒரேயொரு பாவத்தைத் தவிர, வேறே எந்தப் பாவத்தை யும் நாம மனசறிஞ்சு செய்யலேயே, பூரணி ?

மெய்தான், ஆத்தா ! இந்தச் சத்தியமும் தரும மும் உனக்கும் புரியும்; எனக்கும் புரியும் !

(குறுக்கிட்டு) காளி ஆத்தாளுக்கும் புரியுமேடி,

பூரணி !

(எரிச்சலுடன்) காளி ஆத்தாளுக்குப் புரிஞ்சு என்ன புண்ணியம் ? காளி ஆத்தாளைச் சாட்சி வச்சு நீ தாலி கட்டிக்கிட்டே. ஆணுல், இந்தக் காளி, தான் எங்கே சாட்சி சொல்ல நேருமோ என்னமோன்னு பயந்து, பேசாத ஊமையாகிப் போயிட்டாளே, பாவம் ?... ஆத்தா பேசியிருந் தால், ஈவிரக்கமில்லாத இந்தச் சமுதாயம் நம் பளை நாக்கிலே நரம்பில்லாமல் இப்படி நாளும் பொழுதும் ஏசிப்பேசிக் கைகொட்டிச் சிரிச்சுக் கிணு இருக்குமா ?...

(வேதனையுடன்) வாஸ்தவம்தான் மகளே, வாஸ்தவம்தான் ! - .

(செருமலுடன்) புண்ணியவதியான நீ நாறச்

சிறுக்கியாம் ... நான், அப்பன் பேர் தெரியாத அவமானச் சின்னமாம் ... இப்படிப்பட்ட