பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


இன்ைெரு சித்திர விசித்திரத்தையும் நான் எண்ணிப் பார்க்கின்றேன் ேஆண்டவன் படைத்த மனிதனின் விளை யாட்டை ரசித்து அனுபவிக்கும் பார்வையாளனுக அதே ஆண்டவன் அமைகிருனென்றல், எழுத்தாளைே, தான் படைத்த மனித நாடகத்தின் பங்குதாரணுகவே அமர்ந்து விடுகிருன் !-ஆகவே, எழுத்தாளனுக்குத்தான் படைப்புச் சக்தியைப் பார்க்கிலும் கூடுதலான பொறுமையும் பொறுப்பும் தேவைப்படுகின்றன. இல்லையேல், மனிதனின் மன வாழ்க்கை வெறும் கூத்தாகவும் நையாண்டி நாடகமாகவும் உருமாறி, உருக்குலைந்து போய்விடாதா, என்ன?

கிராமப்புறச் சூழல் கொண்ட கஞ்சிக் கலயம் என்ற என்னுடைய முழு நீள நாடகத்தில் நான் இவ்வாறு குறித் திருந்தேன் 3 இலக்கியத்திலே சிறு கதையோ, கவிதையோ, நவீனமோ சாதித்துக் காட்டாத-சாதித்துக் காட்ட முடியாத ஒரு திடீர்ப் பலனை அல்லது திடீர் விளைவை உண்டு பண்ணிக் கொடுக்கும் அல்லது, உண்டு பண்ணிக் காட்டும் ஒர் அபூர்வ சக்தி நாடகத் துறைக்கே இருக்கிறது. மேடைக்கும் மேடையை ரசிக்கும் பொது மக்களுக்கும். ஊடாக ஊடும் பாவுமாகவும் பசியும் வயிறுமாகவும் இருந்து வருகின்ற நெருங்கிய பிணைப்பையும் நெருக்கமான இணைப்பையும் . சிந்தித்துப் பார்த்தால், மேற்கண்ட நியதியின் உண்மைநிலை புலனுகக் கூடும். அதனுல்தான்; உலக அரங்கத்திலே, நாடக இலக்கியம் ஈடு எடுப்பற்ற தோர் இலக்கிய அந்தஸ்துடன் என்றென்றும் விளங்கியும் வருகிறது !.-இப் பெருமைக்குப் பெருமை சேர்க்க வல்லது. தமிழ் நாடக இலக்கியம் !

“எழுதுவது எப்படி?’ என்ற தொகுப்பு நூலில் நாடகத் தின் இலக்கணத்தை நான் வரம்பறுத்துக் காட்டிய விதம் இப்படி அமைந்தது!-வாழ்க்கை என்னும் விதியை அதற். குகந்த நெறிமுறையோடு வாழ்ந்து கட்டும் ஓர் உன்னதத்