பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

வீக புருஷர்கள். தெய்வ அம்சம் நிறைந்தவர்கள். நாட்டின் லட்சிய புருஷர்கள். வீரர்களும் அவர்களது வீரச் செயல்களும் பிற்காலத்து மக்களுக்குத் தக்க ஆதர்சமாக இருக்கவேண்டுமல்லவா? அதற்காக இந்த இதிகாசங்களிலுள்ள பலப்பல சம்பவங்கள் பலப்பல முறையில் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. பல்லவ அரசர்களின் சிற்பங்களில் எல்லாம் பகீரதன் தவம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கண்ணனும் அவனுடைய லீலைகளும், ராமனும் அவனுடைய வெற்றிகளும், பஞ்சபாண்டவர்களும் அவர்களுடைய யாத்திரைகளும் எப்படி எப்படியெல்லாமோ உருவாகியிருக்கின்றன. எவ்வளவுதான் இதிகாசக் கதைகள் சிற்பிகளின் மனதைக் கவர்ந்தாலும் இறைவன் திருவுருவை அமைக்க இவர்கள் காட்டிய சிரத்தை இந்தச் சித்திரங்களை உருவாக்குவதில் காட்டப்படவில்லை.

‘இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவன் இறைவன்’ என்று எழுதிக்காட்ட ஒண்ணாத இறைவனுடைய பலப்பல மூர்த்தங்களை, அசாதாரணமான தெய்வீகத்தை எடுத்துக்காட்டத் தலைகளை அதிகமாக்கியிருக்கிறார்கள். கை கால்களை அதிகமாக்கியிருக்கிறார்கள். பம்பாயை அடுத்த எலிபெண்டா (Elephanta) குகைகளில் உள்ள திரிமூர்த்தியைத்தான் பாருங்களேன். சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம் எனும் மூன்று சக்திகளையும் காட்ட மூன்று முகங்கள், செய்யும் செயலுக்கேற்ற மகத்தான கம்பீரம் எல்லாவற்றையும் அல்லவா அந்தச் சிலையில் பார்க்கிறோம். இந்தச் சிலையைப் பார்த்து இதைச் செய்த சிற்பிக்கு நிர்மாண சாஸ்திர அறிவு இல்லை என்று முடிவு கட்டிவிட முடியுமா என்ன? வேண்டுமென்றே

106