பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

தான் இந்தத் தெய்வீக சிலை உருவங்களில் தசை உறுப்புக்கள் அதிகமாக எடுத்துக்காட்டப்படவில்லை. எல்லோரா குகையிலுள்ள பைரவர் சிலையைப் பார்த்தால் முறுக்கேறிய தசையையும் நரம்புகளையும் காட்டாமலேயே காலபைரவரின் கோரத் தாண்டவத்தை நாம் உணரும்படி செய்துவிடுகிறான் சிற்பி. கைகால்களின் அமைப்பும் முகபாவமும் அத்தகைய ஒரு உணர்ச்சியை நம் உள்ளத்தில் உண்டாக்கிவிடுகின்றன. இதுதானே கலை?

சிறந்த அறிவின் சின்னம் சாந்தமூர்த்தி புத்த பெருமானையும், ஆனந்தத் தாண்டவம் புரியும் அந்த அற்புத நடராசனையும், கோரத்துக்கு எடுத்துக்காட்டாயிருக்கும் காலபைரவனையும் உருவாக்கிய சிற்பிகளே அழகின் இருப்பிடமாகிய பெண்மையையும் உருவாக்கியிருக்கிறார்கள். தெய்வீக உருவங்களுக்கு அடுத்தபடியாக சிற்பங்களுக்கு விஷயமாய் அமைந்தவள் பெண்தான். அவளுடைய அழகு, அவளுடைய மோகன உருவம், அவளுடைய உணர்ச்சி, மென்மை, காதல், மாயை எல்லாம்தான் சிற்பிகளுக்கு விஷயதானம் அளித்திருக்கின்றன. துடியிடையும், விம்மும் மார்பகமும் கொண்ட அழகிகளது உருவங்கள் நல்ல லலிதம் உடைய வடிவங்களாக உருவாகியிருக்கின்றன. அந்த அங்க விளைவுகளிலே காணுகின்ற லலிதமும் லயமும் பார்ப்பவர் உள்ளத்தை பரவசமாக்கியிருக்கின்றன. தெய்வ மகளிர் அம்பிகைகள் எல்லாம் வடிவங்கள் பெற்றிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது அங்கங்களிலே துள்ளி ஓடுகின்ற உணர்ச்சியைக் காட்டி மனிதனைத் துடிதுடிக்கச் செய்திருக்கிறார்கள். கைவழி நயனம் செல்லும்படியும் கண்வழி மனம் செல்லும்படியும் அவர்களது கைக

107