பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


10
கலையும் கலை மெருகும்
சிற்பத்தில் - காவியத்தில்


ங்கள் ஊரில் ஒரு முருகன் கோயில். அங்கு சோமவாரம் தோறும் சந்தனக் காப்பு. மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை திரையிட்டு அலங்காரம் நடந்துகொண்டிருக்கும். திரை விலகியதும், தமிழ்க் கடவுள் முருகனைக் காண எண்ணற்ற பக்தர்கள் சந்நிதியில் காத்துக் கிடப்பார்கள். ஏன் இத்தனை கூட்டம் இந்தக் கோயிலில் என்று எண்ணுவேன் நான். எனக்கோ மூர்த்தி ஆடை அணிகள் இல்லாமல், அலங்கார ஆடம்பரம் இல்லாமல் இருக்கும்போதுதான் அழகாய் இருப்பதாகத் தோன்றும். இந்தச் சந்தனக்காப்பு என்பதெல்லாம் பக்தர்கள் அன்பு மேலீட்டால் செய்வதே ஒழிய மூர்த்தியை அலங்கரிப்பதாகாது என்று எண்ணுபவன் நான். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் அலங்கோலமே செய்வதாகக்கூடச் சொல்வேன். இப்படி எண்ணிக்கொண்டே ஒரு சோமவாரத்தன்று இரவில் கோயிலுக்குள் நுழைந்தேன். சந்தனக் கோட்டிங்குக்குள் புதைந்து இருந்தாலும் முருகன் புன்னகை பூத்து அருணதளபாத பத்மம்

109