பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

லேற்றி மேல் நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ரவீந்திரநாத் தாகூரும், சரோஜினி தேவியும் கவிதைத் துறையில் உலக மக்களின் நல்லுறவை வளர்க்க எவ்வளவு தொண்டு புரிந்தார்களோ, அவ்வளவு சேவையைக் கலையுலகில் இந்த ஆனந்தக் குமாரசாமி செய்திருக்கிறார். சிவனது நடனம், ராஜபுத்திர ஓவியக் கலை, பௌத்த சிலை சாஸ்திரம், வேதங்களை உணரப் புதிய மார்க்கம், இந்தோனேஷியாவின் கலை, சரித்திரம் இவைகளைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசியிருக்கிறார். பெரிதாக எழுதியிருக்கிறார். இந்திய நாட்டு அருங்கலை ரசமற்றது. விகாரமானது என்று சொல்லிய மேல் நாட்டார்களுக்கெல்லாம் சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறார். இந்தியக் கலையின் அரிய தத்துவங்களையும், மகோன்னத உயர்வையும் எடுத்து விளக்குவதில் அவருக்கு நிகர் அவரே என்று பெயர் பெற்றிருக்கிறார்.

கேவலம் காமம், பணம் முதலிய லௌகீகத்தில் ஈடுபடாமல் தெய்வீகத் தன்மையோடு தத்துவ அறிவாற்றலையும் பெற்றவர்கள் இந்தியக் கலைஞர்கள் என்றும், அவர்கள் - வாழ்க்கையையே அவர்கள் வளர்த்த கலைமூலம் எக்காலத்தும். எல்லோரும் கண்டு களிக்கும்படி சிலை, சிற்பம், ஓவியம் மூலம் செய்திருக்கிறார்கள் என்றும், இந்தக் கலை எவ்வளவு புராதனமானது. எவ்வளவு புனிதமானது என்றும், உலகம் முழுவதுமே பறைசாற்றியிருக்கிறார், அப்படி இல்லாமலா இவரை பாஸ்டன் நகரில் உள்ள நுண்கலைக் காட்சி சாலையில் இந்திய இரானியப் பகுதிக்கு நிரந்தரத் தலைவராக நியமிப்பார்கள்? அமெரிக்கர்களும் இவருடைய கலையறிவைப் புகழ்ந்திருக்

136