பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

கோயில் கட்டடக் கற்றுக் கொண்டார்கள் தமிழ் மன்னர்களும், தமிழகத்துச் சிற்பிகளும். இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மன் காலத்தில் இந்தக் கற்றளிகள் அமைக்கும் முறையில் வல்லவர்களாக இருக்கிருக்கிறார்கள் தமிழர்கள். மாமல்லபுரத்திலே கடற்கரைக் கோயில் ஒன்று பிரசித்தமாக இருக்கும், அந்த ஜலசயனர் கோயில் நல்லதொரு கற்றளி. அதேபோல, காஞ்சியில் ஊருக்கு மேற்கேயுள்ள பல்லவர் மேட்டில் கட்டியிருக்கும் கைலாசநாதர் கோயிலும் இந்தக் கற்றளிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதைப்போலவே செஞ்சித் தாலுக்காவிலே பனை மலை என்னும் இடத்திலே அமைக்கப்பட்டிருக்கும் கற்கோயிலும்; பல்லவ மன்னர்கள் அமைத்த கற்றளிகளில் ஒன்று. இந்தப் பல்லவ மன்னர்கள் அமைத்த கற்றளிகளைப் பார்த்தே பின் வந்த சோழ மன்னர்களான ராஜராஜனும், அவன் மகன் ராஜேந்திரனும் அற்புதமான கற்றளிகளைத் தஞ்சையிலும் கங்கை கொண்ட சோழீச்சுரத்திலும் கட்டியிருக்கிறார்கள், இவர்கள் பரம்பரையிலே வந்த இரண்டாம் ராஜராஜன், திரிபுவனச் சக்கரவர்த்தி முதலியவர்கள் தாராசுரத்தில் ஐராவதேஸ்வரருக்கும், திரிபுவனத்தில் கம்பகரேஸ்வரருக்கும் நல்ல அழகான கற்றளிகள் அமைத்திருக்கிறார்கள். சோழ மன்னன் கட்டிய கோயில் என்றால் உபானம் முதல் ஸ்தூபி வரை கல்லாலேயே கட்டப்பட்டிருக்கும் என்பது பிரசித்தம்.

இப்படிக் கோயில்களை எல்லாம் கல்லாலேயே கட்டினார்கள், அன்றைய தமிழர்கள். கோயில்களை எப்படி அமைத்தார்கள் என்று தெரிய வேண்டாமா? பாரத நாட்டின் கோயில் கட்டிடக் கலையை மூன்று

142