பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

மண்டபங்கள் எழுந்திருக்கின்றன. இப்படித்தான் கோயில்கள் விரிவடைந்திருக்கின்றன.

இப்படி வளர்ந்த கோயில் அமைப்பில், குடைவரை கற்றளிகளுக்குப் பின் மாடக் கோயில்கள் உருவாகி இருக்கின்றன. இவைகளில் சில பல்லவர் காலத்திற்கு முன்னும் எழுந்ததுண்டு. அவை செங்கல்லால் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அழிந்து சிதைந்திருக்கின்றன. பல்லவர்களுக்குப் பின் வந்த சோழ மன்னர்கள், நாயக்க மன்னர்கள், இந்த மாடக் கோயில்களைப் புதுப்பித்திருக்கின்றனர். மாடிபோல் அமைந்தவை மாடக் கோயில்கள். ஒன்றின் மேல் ஒன்றாக ஒன்பது நிலையுள்ள மாடக் கோயில்களைப் பற்றி சிற்ப நூல்கள் கூறுகின்றன. என்றாலும் தமிழ் கத்தில் மூன்றடுக்குக்கு மேற்பட்ட மாடக் கோயில்கள் இல்லை. சில ஒன்றிரண்டு நிலைகளோடும் நின்றிருக்கின்றன. சீர்காழிக்குக் கிழக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ள திருநாங்கூர் மணிமாடக் கோயிலைப் பற்றியும், நாச்சியார் கோயில் என்ற திருநறையூர் மாடக் கோயிலைப் பற்றியும் திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

செம்பியன் கோச்செங்கணான்
சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம்
சேர்மின்களே!

என்பதுதான் திருமங்கை மன்னன் பாசுரம். இன்னும் ஆடுதுறைக்குத் தென் கிழக்கே ஐந்து ஆறு மைல் தொலைவில் உள்ள வைகல் என்னும் ஊரில் ஒரு மாடக் கோயில் இருக்கிறது. வைகல் மாடக் கோயில்

144