பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்


கோயில் கட்டிடக் கலை சோழ மன்னர்கள் காலத்தில் நாளும் வளர்ந்து, நாயக்க மன்னர் காலத்தில் விரிந்து பின்னர் தேய்ந்திருக்கின்றன என்று சொல்லி காலவரையறை கணக்கிட்டுவிடலாம். தென் தமிழ்நாட்டுக் கோயில்களின் காலத்தை, அங்குள்ள மண்டபங்களை, அந்த மண்டபங்களில் நிற்கும் தூண்களை, அத்தூண்களில் உள்ள பொதிகைகளை வைத்தே நிர்ணயித்தல் கூடும். இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக இச்சுருங்கிய நேரத்தில் நான் பேச விரும்பவில்லை. கோயில் கட்டிடம் உள்ள உறுப்புகள் அதன் பெயர்கள் எல்லாம் பற்றி சாதார்ண் மக்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறவன் நான். நீண்டுயர்ந்த மலையைக் கண்டு எப்படி கோபுரம் அமைக்க விரும்பினானோ அதுபோல மனிதனது உடல் உருவ் அமைப்பைப் பார்த்தே கோயிலை நிர்ணயிக்க முனைந்திருக்கிறான் அவன். நீண்டு நிமிர்ந்த பெருங்கோயில் உறுப்புகள் நல்ல தமிழில், அடி, உடல், தோள், கழுத்து, தலை, முடி என்று ஆறாகும். இதையே சிற்ப சாஸ்திரத்தில் அதிஷ்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி என்று நீட்டி முழக்கி வடமொழியில் சொல்வார்கள், நல்ல கரை அமைப்பே அடி. இதனையே அதிஷ்டானம், மசூரகம், ஆதாரம், தலம், பூமி என்றெல்லாம் கூறுவர். இந்த அடிமேல் எழுந்த உடலே கருவறை, இதனையே கால், பாதம், ஸ்தம்பம், கம்பம் என்று கூறுவார்கள். கருவறையையே திருஉண்ணாழி என்று கல்வெட்டுகளில் குறித்திருக்கும். இந்த கருவறையின் மீது நிற்பதே தோள் என்னும் பிரஸ்தரம், மஞ்சம், கபோதம் எல்லாம். அதற்கும் மேலே கண்

147