பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

தனை சிவன் கோயில்களுக்கும் இன்றும் அம்பிகை சந்நிதி கிடையாது. எல்லோருக்கும் சேர்த்து ஒரே அம்பிகையாய், ஒப்பற்ற அம்பிகையாய், தனிக் கோயிலில் இருப்பவள்தான் அன்னை காமாட்சி. சோழ மன்னர்கள் காலத்தில்தான் அம்பிகைக்கு தனி சந்நிதி அமைத்தார்கள். முதலில் பிரதான கோயிலிலேயே ஒரு சிறு கோயில் கட்டி தெற்கே பார்க்க நிறுத்தினார்கள். அதன்பின் எப்படியோ அம்பிகைக்கு இறைவன் வலப்பக்கத்திலே கட்டினார்கள். செய்த தவறை உணர்ந்து பின்னர் அநேகமாக எல்லாக் கோயில்களிலும் இறைவனுக்கு இடப்பக்கத்திலேயே அம்பிகைக்குப் பெரிய கோயிலையும் கட்டி முடித்திருக்கிறார்கள். சோழர்கள் காலத்தில் இறைவனுக்கு இடப்பக்கத்தில் இருந்த அம்பிகை நாயக்க மன்னர்கள் காலத்திலே திரும்பவும் வலப்பக்கத்திற்கே வந்து கோயில் கொண்டிருக்கிறாள். பெரிய சிவன் கோயில்களிலே ஆதியில் முருகன், கணபதி முதலியவர்களுக்குத் தனித்தனி கோயில்கள் இல்லை. பின்னர்தான் கோயிலின் தென்மேற்கு மூலையிலே விநாயகரும் அவருக்கு எதிர்த்த வடமேற்கு மூலையில் சுப்பிரமணியரும் இடம் பெற்றிருக்கிறார்கள். நடராஜருக்குத் தனிச் சந்நிதி என்பதெல்லாம் மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுந்ததுதான். தெய்வத் திருமுறைகளை எல்லாம் வகுத்த பின்பே, அடியார்கள், நாயன்மார்கள் எல்லாம் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நவக்கிரக வழிபாடு எல்லாம் மிகவும் பிற்காலத்திலேதான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சிவன் கோயில்களைப் போலவே பெருமாள் கோயில்களிலும் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு

149