பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
தென்னிந்தியக் கோயில் அமைப்பும்
பண்பாடும் - மாளிகைகள்

ந்து ஆறு வருஷங்களுக்கு முன்பு நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்தேன். அப்போது கலைகளில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். அவரை அழைத்துக் கொண்டு தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் போனேன். உண்மையிலேயே அக்கோயில் பெரிய கோயில்தான். சோழ மன்னர்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜராஜன் கட்டிய கோயில் அல்லவா அது? அகழி சூழ்ந்தும், அரணால் காக்கப்பட்டும், கோபுரம் வண்ண மாடங்கள் எல்லாம் ஓங்கியும் இருக்கும் அக்கோயிலில் கோளாந்தகன் திருவாசல், ராஜராஜன் திருவாசல் எல்லாம் கடந்து சென்றால் 500 அடி நீளமும், 250 அடி அகலமும் உள்ள வெளி முற்றத்திற்கு வந்து சேர்வோம். அங்குள்ள நந்தி மண்டபம், மகா மண்டபம் எல்லாம் கடந்துதான் கோயிலின் கருவறை வந்து சேரவேண்டும். அங்கு கோயில் கொண்டிருக்கும் பெருவுடையார் பெரிய உருவம் உடையவரே; 54 அடி சுற்றளவும், ஆறு அடி உயரமும் உள்ள ஆவுடை

154