பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

லாம் ஆராய்ந்த அறிஞர்கள் ஆடகமாடம் தன்னகத்கே திருமால் கோவிலைக் கொண்ட அரண்மனையின் ஒரு பகுதியே என்று முடிவு கட்டுகின்றனர். இன்னும் ஆடகமாடம் என்பது அரண்மனை மாதர் உறையும் அந்தப்புரம் என்றும் கூறுவர். இதற்கு ஆதாரமாக,

வேடகம் சேர்ந்த வெங்கானம்
விடலைபின் மெல்லடிமேல்
பாடகம் தாங்கி நடந்தது
எவ்வாறு கொல்? பாழிவென்ற
கோடக நீள் முடிகோன்
நெடுமாறன் தென் கூடரின் வாய்
ஆடமாடம் கடந்தறியாத
என் ஆரணங்கே

என்ற இறையனார் அகப்பொருள் பாடலையும் சான்று காட்டுவர். இப்படியே அரண்மனையின் ஒரு பகுதியை தமனிய மாளிகை என்றும், கனக மாளிகை என்றும் குறிக்கின்றனர், வடநாடு சென்று, ஆரிய அரசரை வென்று, கனக விஜயர் தலையில் பத்தினிக் கடவுளின் திருவுருவம் சமைக்க கல்லை ஏற்றி வஞ்சி நகருக்கு வெற்றியோடு திரும்பும் சேரன் செங்குட்டு வனை எதிர்கொண்டழைக்க அரசி அரண்மனைப் பகுதிகளைக் கடந்து வந்தனள் என்பர் இளங்கோவடிகள்.

படுதிறை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து
இடைநின்று ஓங்கிய நெடுநிலை மேருவிற்
கொடி மதில் மூதூர் நடுநின்று ஓங்கிய
தமனிய மாளிகைப் புனைமணி அரங்கின்

158