பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியோர். வண்ணம் காணிய வருவழி

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இக்கனக மாளிகையில் கிடந்த கட்டிலையும் விட்டு விடவில்லை அடிகளார்.

கதிர் செலவு ஒழித்த கனகமாளிகை
முத்து நிரைக் கொடித் தொடர் முடுவது
வணைகிய
சித்திர விதானத்து, செப்பூங்காவின்
இலங்கு ஒளி வைரமொடு பொலந்தகடு போகிய
மடையமை செறுவின் வான் பொற்கட்டில்
புடைதிறை தமனியப் பொற்கால் அமளி

என்றே விளக்கமாக உரைப்பார்.

இப்படித்தான் ஆடகமாடமும் கனகமாளிகையும் குறிக்கப்படுகிறது சிலப்பதிகாரத்தில், மேலும் செங்குட்டுவன் ராஜ சூய யாகம் செய்ய முனைந்தபோது, எல்லா வசதிகளும் நிறைந்த வேள் ஆவிக்கோ மாளிகை ஒன்றையும் குறிப்பிடுகிறான். இது ஆவிக்கோ என்ற பிரபுவின் மாளிகையாக இருக்க வேண்டும் என்றும் கூறுவர். இவ்வண்ணமே மாளிகைகளைப் பற்றிய தகவல்கள் பழம் பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்தில் கிடைக்கின்றன நமக்கு.

கவிச்சக்கரவர்த்தி கம்பனது இராம கதையைப் புரட்டினால், அயோத்தி நகர மாளிகைகளின் வர்ணனைகளைப் பார்க்கலாம். ‘திங்களும் கரிது என, வெண்மை தீற்றிய சங்க வெண் சுதை உடைத் தவள மாளிகையை’ வர்ணிப்பான் ஒருதரம். ‘புள்ளி அம்

159