பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

புறவு இறை. பொருந்தும் மாளிகை தள்ள அரும் தனியத் தகடு வேய்ந்திருந்தது' என்பான் மறுதரம். இன்னும் இம்மாளிகைகள் ‘சந்திர காந்தத்து தாளம் வேய்ந்து, பந்திருக்க தூண்கள் பவளப் போதிகை ஏந்தி நின்றன’ என்பான். அயோத்தியைவிட்டு இலங்கைக்கு வந்தாலோ,

பொன் கொண்டு இழைத்த
மணியைக் கொடு பொதிந்த
மின் கொண்டமைத்த
வெயிலைக் கொடு சமைத்த
என் கொண்டியற்றிய
எனத் தெரிகிலாத
வன் கொண்டல் விட்டு
மதி முட்டுவன மாடம்

என்றே வர்ணிக்க முற்பட்டு விடுவான்.

இலக்கிய உலகில் இருபெரும் புலவர்களாம் இளங்கோவும் கம்பனும் குறிக்கின்ற மாளிகையைப் பார்த்தோம். இனி விஸ்வகர்ம வாஸ்து சாஸ்திரத்தில் இம்மாளிகை அமைப்பு எப்படி இருக்கிறது என்றும் பார்த்துவிடலாமே! அரசர்கள் வசிக்கத் தகுந்த அரண்மனைகள், மற்ற பிரமுகர்கள் வசிப்பதற்கென கட்டும் மாளிகைகள் என்று இரண்டு பிரிவில் இக்கட்டிடக் கலை விவரிக்கப்பட்டிருக்கிறது. அரண்மனைகள் நகர மத்தியில் அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட தனி இடத்தில் கட்டப்பட வேண்டும். அநேகமாக அரண்மனை சதுரமாகவே இருத்தல் வேண்டும். நீண்ட சதுரமாகவும் இருக்கலாம். நகரத்தின் அளவில் எட்டில் ஒரு பங்குக்கு மேற்படாத எல்லைக்குள்ளே

160