பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

துர்காஸ்யம் என்பன அவை. இன்னும் படுக்கை அறைகளைப் பற்றியும் விரிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அவை அரண்மனைக் கட்டிடத்தின் முன் பகுதியிலேயே இருக்கலாம். வேனல் காலத்தில் குளிர்ச்சி உடையதாகவும், குளிர் காலத்தில் வெப்பமுடையதாகவும் இருக்க வேண்டும். ஆம்; Air Condition எல்லாம் பண்ணத் தெரியாத காலத்தில் எழுதி வைக்கப்பட்டதல்லவா இது. சன்னல்கள், கட்டில்கள், மெத்தைகள், விரிப்புகள், விளக்குகள் எல்லாம் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் விஸ்தாரமாகவே கூறப்பட்டிருக்கின்றன. அரண்மனையில் வஸந்த மாளிகை என்ற பகுதியும் இருத்தல் வேண்டும். இதுதான் அரசர்களது ‘சம்மர் ரிஸார்ட்.’ அரண்மனை வாயில்கள் எவ்வளவு சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா? நன்கு அகன்று உயர்ந்து சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைய வேண்டும். பன்னிரெண்டு வகை வாயில்களைப் பற்றி வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. லக்ஷ்மி துவாரா, கந்தர்வ துவாரா, விஸ்வதர்ம துவாரா, வைசிராவண துவாரா, வகுண துவாரா, வாசவ துவாரா, சங்கர துவாரா, விஷ்ணு துவாரா, பிரம்ம துவாரா, ஆரிய துவாரா, சந்திர துவாரா, ரிஷி துவாரா என்பவை அவை. எந்த எந்தப் பகுதிக்கு எந்த எந்த வாயில்கள் அமைக்க வேண்டும் என்றும் நியதி உண்டு. இவைகளை விவரிப்பது இந்தக் குறைந்த காலத்தில் இயலாத காரியம். பிரதான வாயில்களில் எல்லாம் வெள்ளித் தகடு, பொன் தகடு போர்த்தலாம். சிறந்த வேலைப்பாடுகளையும் செய்யலாம். வாயில்களின் பேரில். அமைக்கும் தோரணங்களில்

162