பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

கட்டப்பட்டிருக்க வேண்டும். இவர்களில் விஜயராகவ நாயக்கர் சோழர் அடியொற்றி பழையபடி கோயில்கள் கட்டுவதிலேயே முனைந்திருக்கிறான். மாயூரத்து புஷ்ய மண்டபம், திருவிடை மருதூரில் வீர சோழன் ஆற்றங்கரையில் கட்டப்பட்ட மண்டபம், மன்னார்குடி ராஜகோபாலன் கோயில் மண்டபங்கள் எல்லாம் இவன் கட்டியவையே என்று சரித்திரம் கூறும். தஞ்சை அரண்மனையில் உள்ள காவல், கூடமும் எழு நிலை மாடமும் கம்பீரமானவை. இவைகளை எல்லாம் தூக்கி அடிப்பதே அங்குள்ள சங்கீத மகால். சேவப்ப நாயக்கர் காலத்தில் கட்டப் பட்டிருக்க வேண்டும். மைக் முதலிய கருவிகளின் துணையில்லாமலேயே ஹால் முழுவதும் ஒருபடித்தாய் இசை கேட்கும் முறையில் கட்டப்பட்டிருக்கிறது. ரகுநாத அத்பூதயம் என்ற நூலிலே இம்மாளிகையின் வனப்பு பலப்படப் புகழ்ந்து பேசப்பட்டிருக்கிறது. கட்டிடக் கலையில், அதிலும் சினிமாக் கொட்டகை கட்டும். கலையில் ஆர்வம் உடையவர்கள் சென்று காண வேண்டிய ஒன்று.

மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். பெரிய பெரிய பிரமாண்டமான தூண்கள், அழகான ‘ஆர்ச்சுகள்’, விதானங்கள் எல்லாம் அமைந்தவை. மதுரை மீனாட்சி கோயிலை விரிவு செய்து புது மண்டபம் முதலியனை கட்டும்போதே இந்த மஹாலையும் திருமலை நாயக்கன் கட்டியிருக்க வேண்டும். பதினேழாம் நூற்றாண்

166