பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16
கோயில் வளர்த்த கலைகள் -
ஓவியம்


குழலும், தும்புரு நாரதர்
பாடலும் குனித்துச்
சுழலும் கொம்பனார் ஆடலும்
மூவர் வாய்த்துதியும்
விழவில் செல்வமும் சுருதியும்
திசையெலாம் விழுங்கும்
முழவம் கண் துயிலாதது
முன்னவன் கோயில்

என்று மதுரை நகரத்துக் கோயில் சிறப்பை பரஞ்சோதி முனிவர் பாடுகிறார். ஆடலும், பாடலும் சித்திரமும், கவிதையும், இசையும் கலந்திருக்கும் நிலைக்களமாக மதுரை மாநகர் பெருந்திருக்கோயில், இலங்கிற்று என்பதே திருவிளையாடற் புராணம் எழுதியவர் கண்டது. இதேநிலைதான் தமிழ்நாட்டின் எல்லாக் கோயில்களிலும்.

கோயிலை மய்யமாக வைத்தே நம் நாட்டு அழகுக் கலைகள் எல்லாம் உருவாகியிருக்கின்றன். கோயில்கள் இல்லாவிட்டால் தேவாரம், திருவாசகம்

178