பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

நிலைக்கு தமிழனோ இல்லை வேறு இந்தியனோ உயரவில்லை. அஜந்தா ஓவியங்கள் அருமையானதுதான் என்றாலும் வாடிகான் (Vatican) மண்டபத்தை இன்று அலங்கரித்து நிற்கும் சித்திரங்களுக்கு இணையாகாதுதான். ஆயிரம் வருஷங்களுக்கு மேலாகியும் அழியாது நிற்கும் பெருமையுடையது என்பதே அஜந்தாவின் பெருமை. தமிழ்நாட்டிலோ அஜந்தா அளவிற்குக்கூட ஓவியக் கலை உருவாகவில்லை. தமிழ்நாட்டின் அஜந்தா என்று புகழ் பெற்றது சித்தன்னவாசல் ஓவியங்கள், இவைதான் தமிழ்நாட்டில் காலத்தால் முந்தியவை. தொண்டைமான் புதுக்கோட்டைப் பகுதியில் உள்ள குடைவரைக் கோயில் ஒன்றில் இச்சித்திரங்கள் எழுதப் பெற்றிருக்கின்றன. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஆதியில் சமணனாக இருந்து பின்னர் நாவுக்கரசரால் சைவனாக்கப்பட்டவன். அவன் சமணனாக இருந்த காலத்திலே அமைந்த இந்த சித்தன்னவாசல் குடைவரையிலே தான் பல சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. குடைவரையில் உட்புறத்திலேயுள்ள விதானத்தில் சமணர்களது மோட்ச சாம்ராஜ்யம் என்னும் சாமவ சரவணப் பொய்கை தீட்டப்பட்டிருக்கிறது.

அள்ளற் பழனத்து
அரக் காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்டது
என வெறீ இ

என்று அன்று முத்தொள்ளாயிரக் கவிஞன் பாடினானே, அதுபோல தாமரை மலர்கள் நிறைந்த தடாகம் அங்கு புதுப்புனல் குடையும் ஆடவர் பெண்டிர்

180