பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

இருக்கிறது. காத்திரத்திலும் அழகிலும் சிறந்த கோயிலாக அந்த வட்டாரத்திலே தலைதூக்கி நிற்கிறது. இக்கோயிலின் வெளிச் சுவரில் இடைவெளி இல்லாதபடி சிற்ப வடிவங்களை அடுக்கடுக்காய் அமைத்தி ருக்கின்றனர். பட்டை பட்டையாகக் கிட்டத்தட்ட பன்னிரெண்டு பட்டைகள் அக்கோயிலின் வெளிச்சுவரை அழகு செய்கின்றன. அடித்தளத்தில் யானைகள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஓடுவது போலவும், அதற்கு மேலே குதிரைகள், யாளிகள், எருதுகள், அன்னங்கள் என்றெல்லாம் பட்டைகள் அமைந்திருக்கும். இவைகளுக்கு இடையே. ஒரு அகன்ற பட்டையில் ராமாயணம், மகாபாரதம் என்னும் இதிகாசக் காட்சிகள் பலவும் செதுக்கப்பட்டிருக்கும். மேல் தளத்திலே கல்லிலே துளை போட்டு அமைந்திருக்கும் ஜன்னல்கள் இருக்கின்றன. அதற்குக் கீழே மூன்றடி அகலம் உள்ள இடத்தில்தான் தெய்வத் திருவுருவங்கள் பலவும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய சிற்பங்கள் நிறைந்த ஒரு கலைக் கூடமாக இக்கோயில்கள் விளங்குகின்றன. அதனால்தான் சிறந்த கலா ரஸிகரான . பெர்கூஸான் என்பவர் மத்திய கால மேலைநாட்டுக் கலைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெறாத கட்டிடக் கலை, இங்கே ஹலபேடு கோயிலிலே தான் பூரணத்வம் பெற்றிருக்கிறது என்று வாயாரப் புகழ்கிறார். The artistic combination ce horizontal and vertical lines and the play of outlint light and shade far surpass anything in Goethic Art. The effects are just what the medical artitechts were aiming at, but which they never attained so perfectly as was done in Haiebid என்பது அவரது விமரிசனம்.

54