பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறேன். எப்படியும் சிற்பக் கலை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.”

“எல்லாம் சரிதான். ஸங்கீதம் கற்றுக் கொள்ளுமுன் கவிபாட கற்றுக் கொள்வது அதி முக்கியமாயிற்றே! சாஹித்யமில்லாமல் உருவாகும் ஸங்கீதம் உயர்ந்ததாகாதே.”

“சரி சுவாமி.... கவி பாடவே கற்றுக் கொடுத்துவி டுங்களேன்.”

“அதில் தான்ப்பா சங்கடம் இருக்கிறது. கவி பாடும் கலை ஒருவரால் கற்பிக்கப்படுவது அல்லவே. கவிதையை இன்னார் இப்படித்தான் பாட வேண்டும் என்றெல்லாம் நியதி கிடையாதே. கருவிலே அமைந்த திருவாக அல்லவாக இருக்க வேண்டும். இறையருளினால்தானே ஒருவருக்கு அக்கலை சித்தியாக வேண்டும். ‘Poetry is not born of rules. Rules are deducable from Poetry. Poetry is the gift of the Gods’ என்று மேல் நாட்டு மேதை அரிஸ்டாட்டில் கூட முடிவு கட்டி விட்டானே.”

இப்படி ஒரு பேச்சு சிற்பக் கலை கற்க வந்த ஒரு அரசகுமாரனுக்கும், சிறந்த கலா வல்லுநரான ஒரு முனிவருக்கும். இது என் சொந்தக் கற்பனை அல்ல. சில்ப ரத்தினத்தில் உள்ள ஒரு கதைதான். இதிலிருந்து நமக்குத் தெரிகிறது சிற்பம் என்றால் எவ்வளவு அருமையானது, எவ்வளவு சிரமமானது என்றெல்லாம். இப்படிப்பட்ட சிரம சாத்தியமான ஒரு கலையைத்தான், ஒரு செல்வத்தைத் தான் நமது தமிழ் மக்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலே தேடி வைத்திருக்கிறார்கள் இந்தச் செல்வம்

62