இந்தியக் கலைச் செல்வம்
உருமே இல்லாத கடவுளுக்கு உருவம் கற்பிக்க முனைந்தவன் கலைஞன். அண்ட பிண்ட சராசரங்களை எல்லாம் ஆட்டி வைக்கிறான் இறைவன். அப்படி ஆட்டி வைக்கிறவன் தானும் ஆடிக் கொண்டே ஆட்டினால்தான் அண்டங்கள் ஆடும் என்று சிந்தித்தான். அப்படிச் சிந்தித்த சிற்பியே ஆடும் பெருமானை அற்புதமாக உருவாக்கியிருக்கிறான். அகிலாண்ட கோடி ஈன்ற அன்னை என்கிறார்கள் இறைவியை. அந்த அகில கோடி உயிர்களையும் காக்கின்ற பெருமாட்டி அரை நிமிஷம் கூட கண்ணை மூட முடியுமா? ஆதலால் விழித்த கண் விழித்தபடியே இமை கொட்டாது நின்று அருள் புரிகிறாள். அவள் என்றெல்லாம் எண்ணியவன் தானே, "கண் இரப்பையே இல்லாது விழித்த கண் விழித்தபடியே இயங்கும் மீன் கண்ணைப் பெற்றவள் அவள் என்று கற்பிக்க முடியும். மீனாகவி என்று அந்த அன்னைக்குப் பெயரிட்டு அழைக்கவும் முடியும்.
இப்படித்தான் கலைஞர்கள் சிந்தனையில் கடவுளர் எல்லோரும் உருவாகியிருக்கிறார்கள். இந்தச் சிந்தனைச் செல்வங்களே சிற்ப வடிவங்களாக நம் நாடு முழுவதும் நிறைந்திருக்கின்றன. இன்று சிற்பக் கலையை உருவாக்க கல்லையும், மரத்தையும், மண்ணையும், உலோகத்தையும் கருப் பொருளாகக் கையாண்டிருக்கிறார்கள்.
73