பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

சிங்கமும் சிற்பத்தில் உருவாகி, மொஹஞ்சதாரோச் சிற்பங்களோடு போட்டியிட ஆரம்பித்திருக்கின்றன. மௌரியர்கள் காலத்திற்குப் பின் பர்ஹுத் சாந்சி ஸ்தூபங்களிலும் நல்ல சிலை உருவங்கள் உருவாகியிருக்கின்றன. காந்தாரத்திலும் மதுராவிலும் பல புத்த விக்கிரஹங்கள் தோன்றியிருக்கின்றன. புத்தரையும்; போதி சத்துவரையும் எவ்வளவு அழகாக உருவாக்கினார்களோ அத்தனை அழகுடனேயேதான் யக்ஷர்களையும் யக்ஷிணிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள் அந்தக் காலத்துச் சிற்பிகள்.

சிற்பக் கலையின் பூரண வளர்ச்சியை நாம் மகத நாட்டரசர் குப்தர்களின் காலத்தில்தான் பார்க்கிறோம். அப்போதுதான் கடவுளை வெறும் மனிதனர்களாகக் காட்டும் முறை அடியோடு மாறியிருக்கிறது. அழகுருவாய் அமைந்த புத்தரின் முகத்திலே ஒரு சாந்தி நிலவ வைத்திருக்கிறான் சிற்பி. சாரநாத்திலும், மதுராவிலும் உள்ள பெரிய புத்த விக்கிரகங்கள் இன்றும் ஒரு தெய்வீக உணர்ச்சியை நமக்கு ஊட்டுகின்றன. அஜந்தா, அவுரங்காபாத், பாக், காங்கேரி முதலிய இடங்களில் காணும சிறபங்கள், சிற்பக் கலை தனித்து நிற்கத் தோன்றிய ஒரு கலையல்ல, மனிதனின் வாழ்க்கையோடு ஒட்டி வளர்ந்த ஒரு நல்ல கலை என்பதைக் காட்டுகின்றன. எல்லாம் உயர்ந்த லக்ஷியத்தை விளக்கும் உன்னதச் சிற்பங்கள்.

பௌத்தமும், சமணமும் இந்தப் புத்தர், பார்ஸ்வநாதர், நேமிநாதர் சிலைகளைச் சுற்றி வளர்ந்தது போல சைவமும், வைஷ்ணவமும் எண்ணற்ற தெய்வ வடிவங்களைச் சுற்றியே வளர ஆரம்பித்திருக்கின்

84