பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

றன. ஆக்கிக் காத்து அழிக்கும் திரிமூர்த்தித் தத்துவம் எல்லாம் அற்புதமான சிலை உருவத்தில் உயிர் பெற் றிருக்கின்றது.

இந்தக் காலத்தை ஒட்டித்தான் எல்லோராவிலும், எலிபெண்டாவிலும் அழியா அழகுடைய சிற்பங்கள் பல உருவாகியிருக்கின்றன. பௌத்தம், சமணம், சைவம், வைஷ்ணவம் எல்லாம் ஒன்று கூடுமிடம் எல்லோரா. மொத்தம் இருக்கும் 34 குகைகளில் 14 குகைகளில் பெரிய பெரிய புத்த விக்கிரகங்கள். வாயில்களிலோ துவாரபாலகர்கள். புத்தரைச் சுற்றிக் கந்தர்வர்கள். புத்தரின் தாயான மாயையும், மனைவி யசோதையும் கூட அங்கு உண்டு. 17 குகைகளில் சைவ வைஷ்ணவ மூர்த்திகள் இடம் பெற்றிருக்கின்றனர். எல்லா வகையிலும் சிறப்புடையது கைலாசநாதர் குகை என்னும் ரங்கமகாலே. இதைக் குகை என்று சொல்வதைவிட ஒரு பெரிய கோயில் என்று சொல்வதுதான் பொருந்தும். இந்தக் கோயிலின் முன் மண்டபமே 276 அடி நீளம். 154 அடி அகலம். மண்டபத்தின் இரு பக்கத்துச் சுவர்களிலும் ராமாயணத்திலிருந்தும், பாரதத்திலிருந்தும் பல காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குகைக் கோயில் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராஷ்டிரக்கூட அரசன் முதலாம் கிருஷ்ணன் காலத்தில் கட்டப் பட்டதாகச் சரித்திரம் கூறுகின்றது. இத்துடன் அங்குள்ள ராவணக் குகையும் சிறப்பு வாய்ந்தது. அங்கும் சிற்ப உருவங்கள் பல காட்சி கொடுக்கின்றன. மகிஷாசுரமர்த்தனம், சிவதாண்டவம், சிவபார்வதி திருமணம் முதலிய காட்சிகளும், கஜலக்ஷிமி, பூவராக மூர்த்தி, திரிவிக்கிரமன், கோவர்த்தனதாரி, உக்கிரநர

85