பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

சிம்மன் முதலியவர்களும் காட்சி கொடுக்கிறார்கள். சைவமும், வைஷ்ணமும் பின்னிப் பிணைந்து உறவ கொண்டாடுகிறது இங்கே. இன்னும் கொஞ்சம் திரும்பினால் ஜைனர்கள் குகை, இந்திரசபை ஜகந்நாத சபைகளுடன் பார்ஸவநாதர் நிர்வாண உருவத்தில் காட்சி கொடுப்பார். புத்தரையே ஒத்திருக்கும் மகாவீரர் உருவமும் இங்கு உண்டு. எல்லோராக் குகையில் நுழைந்து பார்த்துவிட்டு வெளியே வந்தால் சமய உணர்வு வளரும். ஆனால், சமய வெறி நீங்கும். சைவம், வைஷ்ணவம், சமணம், பௌத்தம் எல்லாம் எப்படி இணைந்து உறவு கொண்டாடுகிறது என்பதைக் கண்ட பிறகும் ‘அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன்’ என்றுரைக்கும் அறிவின்மை ஒருவரிடம் நிற்கவா செய்யும்?

இப்போது நமது தமிழன்பர்கள் முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது. ஏது, இந்தியச் சிற்பத்தை எழுத முனையும் சில ஆராய்ச்சியாளர்கள்தான் விந் திய மலைக்குத் தெற்கேயும் நாடு இருக்கிறது என்பதை மறந்திருக்கிறார்கள். இவருக்கென்ன? பொருநைத் தண்ணீர் குடித்து வளர்ந்த இவருமா தமிழ் நாட்டை மறந்துவிட வேண்டும்? என்று அவர்கள் கேட்பது நியாயந்தானே.

தமிழ்நாட்டில் சிற்பக் கலையை வளர்த்த பெருமையில் பெரும் பகுதியை எங்கள் முன்னவர், பல்லவர்களே தட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள்.ஏதோ சோழ மன்னர்களுக்கும் நாயக்க மன்னர்களுக்கும் அந்தப் பெருமையைக் கொஞ்சம் கொடுக்கவும் செய்கிறார்கள். எல்லோராவையும், எலிபெண்டா

86