பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

சிலைகளோடும், கன்னட நாட்டு பேலூர், ஹலபேட், சோமநாத்பூர் சிலைகளோடும் ஒப்புவமை உடையதாக இருக்கின்றன. இவ்விதமே இன்னும் என்ன முறைகளில் எல்லாமோ தமிழ்நாட்டுச் சிற்ப உருவங்கள் மற்றைய நாட்டுச் சிற்பங்களோடு போட்டி போடுகின்றன. உலகில் கிழக்கு மேற்கு என வாதமிடும் மக்கள் மிகுந்த இந்தக் காலத்தில் சிற்பக் கலையில் இத்தகைய ஒற்றுமையும் உறவும் இருப்பது போற்றத்தகுந்ததே அல்லவா?

இதற்கெல்லாம் காரணம் நம் நாட்டுச் சிற்பங்கள் எல்லாம் சமயச் சார்புடையவைகளாய் இருத்தல் தான். சமயத்தையும் சமயத் தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டே நமது கலைகள் வளர்ந்திருக்கின்றன. அஸ்திவாரம் பலமானது. அதனால்தான் அருங்கலைகளாகிய மேல்கட்டுக்கோப்பு உறுதியுடன் இன்றும் நிலைத்து நிற்கின்றது. இப்படிக் கலை வளர்த்த பெருமக்களுக்கு, அற்புதச் சிற்பிகளுக்கு, தெய்வத் தச்சர்களுக்கு நாம் தலை தாழ்த்துகிறோம் என்றால் வியப்பில்லைதானே!

89