பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


வி. ஆம்-குட் மார்னிங்! ஏதாவது விசேஷ முண்டோ? இதோ பாருங்கள், நான் இப்பொழுது-

சு. ஒண்ணும் விசேஷமில்லெ - உங்களே பாத்துாட்டு போகலாமிண்ணு வந்தேன்.

வி. இப்பொழுது, என்னைத்தான் பார்த்தாச்சுதே! போய் வரலாமே? இப்பொழுது நான் நிரம்ப வேலையாயிருக்கிறேன்.

சு. நீங்க - இண்ணக்கி - எல்லா வட்டியும் கொடுக்கரேனிண்னு சொன்னைங்களே ?

வி. ஓ ! அதுவா ?- தெரிகிறது-சாவுகார்ஜி, நான் சொல்வதைக் கேளுங்கள். நான் சொன்னபடி இன்றைக்கு என்னால் கொடுக்க முடியாது-இப்படி தவறிப்போனதற்காக, வருகிற மாசம் முதல் தேதி இரட்டிப்பு வட்டி சேர்த்து கொடுக்கிறேன்.-ஒரு வேளை அசல் முழுவதையும் சேர்த்துக் கொடுத்தாலும் கொடுத்துவிடுவேன்.

சு. எப்படி-முதலியார் சார் ?

வி. அது ஒரு ரகசியம்! அதை இப்பொழுது உங்களுக்குச் சொல்ல முடியாது.-அன்றியும் அந்த பிரிவிகவுன் சில் தீர்மானம் சீக்கிரம் வருமென்று நினைக்கிறேன்.

சு. பிரிவி-அப்பீல்-பணாலா போச்சி முதலியார் சார்! தந்தி வந்தது-அத்தொட்டு தான் உங்களே பாக்க வந்தேன்.

வி. ஒ!-(மேஜையின்மீதிருந்த தந்தியை விரைவில் பிரித் துப் பார்க்கிறார்) ஓ ! அப்படியா சமாசாரம் ?

சு. முதலியார் சார் ! நான் ஒரு விஷம் (விஷயம்) சொல்ரேன்-நீங்க என்னமோ புதுசா கண்டு பிடிக்கரைங் களாம்.--

வி. கண்டு-பிடிக்கிறேன் !

சு. ஆமாம்-நீங்க கண்டு பிடிக்கிறத்தே எனக்கு கொடுத்துடுங்க-வித்துாடுங்க-நானு உங்க கடனெயெல்லாம் ரத்து-கான்சல் (Cancel) பண்ணிஉடரேன்! அத்தோடெகூட ஒரு லாக்! லச்சம் ரூபா கொடுக்கரேன் !

2