பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

தீர வேண்டும். நான் இந்த இரகசியத்தை முற்றிலும் பூர்த்தியாய்க் கண்டு பிடித்த பிறகு சொல்லலாமென்று நினைத்தேன். ஏறக்குறைய முற்றிலும் கண்டு பிடித்து விட்டேன். கொஞ்சம்தான் பாக்கியாயிருக்கிறது, அதையும் நான் கண்டு பிடித்து விட்டால் இது இந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட பல ஆச்சரியகரமான விஷயங்களுக்கெல்லாம் மேம்பட்டதாகும்.

அ. எனக்கொன்றும் அவசரமில்லை. நான் பொறுக்கின்றேன்.

வி. வேண்டாம் அப்பா - இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். இந்த உலகத்திலே இன்னும் ஒரு மனுதனுக்குதான் இதைத் தெரிவித்திருக்கிறேன்-ஒரு அமெரிக்கவாசியான எனது நண்பர் - அவரைப் போல் நீங்களும் இதை இரகசியமாக வைத்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்-நான் உங்களுக்கு அனுமதி கொடுக்கும் வரையில்,

அ. அப்படியே ஆகட்டும் என்று உனக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.

வி. நீங்கள் இந்த இரகசியத்தை வெளியிடுவீர்கள் என்னும் பயத்தினாலல்ல இப்படி நான் கேட்பது. பல முறை இந்த இரகசியத்தை முற்றிலும் கண்டு பிடித்துவிட்டேன் என்று நம்பி, மோசம் போயிருக்கிறேன். ஆகவே பூர்த்தியாவதற்குள் இதை வெளியிட்டு, பலர் நகைக்க நான் ஆளாகக்கூட தென்பதுதான் என் அபிப்பிராயம்.

அ. என்ன அப்பா, கண்மணி, அது ?

வி. இதுதான் அப்பா அது-அம்மா, இரண்டு வருடங்களுக்கு முன்பாக என்னை ராமாயணம் மஹா பாரதம் இரண்டு புஸ்தகங்களையும் படிக்கச் செய்தீர்கள் அல்லவா? மஹா பாரதத்தில் ஒரு கதையிருக்கிறது, அதில் அர்ஜுனன் எய்த மோஹனஸ்திரம் என்னும் பாணத்தினால் கெளரவ சேனை முழுவதும், ஒரு சமயம், 32 நாழிகை வரையில் பிரக்ஞையற்றிருந்ததாகக்