பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15வி. அப்பா, நீங்கள் சொல்வது எனக்கு அர்த்தமாக வில்லை.

அ. கண்ணே, நான் சொல்வதைக் கேள். இத்தனை நூற்றாண்டுகளாகக் கண்டு பிடிக்கப்பட்டுவரும் ஒவ்வொரு விஞ்ஞான ரகசியமும், யுத்தத்தை, மிகவும் பயங்கரமாகவும், கொடூரமாகவும், உலகத்தைப் பாழாக்குவதற்காகவும், உபயோகிக்கப்பட்டேவருகிறது . இவைகளெல்லாம் யுத்தத்தைத் தடுக்க கொஞ்சமாவது மனிதனால் உபயோகிக்கப்பட்டு வருகிறதா ? கொஞ்சமேனும் உன்னுடைய இரகசியமானது, உலகத்திற்கு வெளியிடப்பட்டால் ஒவ்வொரு தேசத்தாரும் மற்றவர்களையெல்லாம் அழிக்கவே பார்ப்பார்கள்: எல்லா தேசத்தாரும் ஒருவரையொருவர் அழித்துக்கொண்டு, பாரதத்தில் யாதவர்கள் கடற்கரையோரம் மடிந்ததுபோல் மடியவேண்டியதுதான் !

அ. ஐயோ ! என்ன கோரம் !

வி. அம்மா, இதன்பலன் இப்படி யொன்றிருக்கக்கூடும் என்று-நான் யோசிக்கவில்லை.

அ. கண்ணே, நான் உன்னே ஒன்று வேண்டிக்கொள்கிறேன், அதன்படி செய்கிறேன்?

வி. நீங்கள் வேண்டுவதாவது ?-கட்டளை யிடுங்கள்-அதன் படி செய்கிறேன்.

அ. இல்லை! உன்னிடமிருந்து அதை ஓர் வரமாக வேண்டுகிறேன்-அகில ஜீவராசிகளின் சம்ரட்சனைக்காக! கடவுளின் கிருபையால் இந்த கடைசி ரகசியத்தையும் கண்டு பிடிப்பாயாயின், என் அனுமதியின்றி வேறொருவருக்கும் இதை வெளியிடுவதில்லை என்று, எனக்குப் பிரமாணம் செய்து தருகிறாயா ?

வி. ஆகட்டும் அப்பா.

அ. அப்படியே செய்வதாக எங்களிருவர் பேரிலும்-பிரமாணம் செய்.

வி. அப்பா, தெரிகிறது-உங்கள் இருவர் பேரிலும் பிரமாணம் செய்கிறேன்-அப்படியே ஆகட்டும்.