பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20



இட். நான் இதற்கு மார்க்கம் சொல்கிறேன் ! என் மனதில் ஆச்சரியகரமான ஓர் யோசனை தோன்றியிருக்கிறது! - கொய்ரிங் இடம் நான் கட்டளையிட்டதாகச் சொல்லி, உன் வசம், மிகவும் வேகமும் பலமும் பொருந்திய, பாம்புகளைத் தெறிக்க வல்ல ஆகாய விமானத்தை, ஒப்புவிக்கச் சொல். அதில் கைதேர்ந்த உன கெஸ்ட்போ அதிகாரிகளில் ஆறு பெயரை ஏற்றி, உடனே புறப்பட்டு இந்தியாவுக்குப் போய், இந்த இந்தியனைக் கண்டு பிடித்து, எப்படியாவது சாகசம் செய்து இந்த இரகசியத்தைக் கண்டறியச் சொல்; அவனிடமிருந்து அறிந்தவுடன் அவன் அதை மற்றவர்களுக்கு அறிவிக்கா வண்ணம் உடனே பார்த்துக் கொள்ளச்சொல் - நான் கூறுவது உனக்கு அர்த்தமாகிற தல்லவா ?

இம். தெரிகிறது! தலைவரே !

இட். அதிருக்கட்டும் - அநேகம் இந்தியர்கள் அவர்கள் கவர்ன்மெண்டார் மீது மிகவும் அதிர்ப்தி யடைந்திருக்கிறதாக நீ சொன்னதாக ஞாபக மிருக்கிறதே எனக்கு?

இம். ஆம் உண்மைதான்! ஆயினும் அவர்களுள் காந்தி முதற்கொண்டு, அந்த தேசத்திய பிரிடிஷ் சைன்யம் ஜெயிக்க வேண்டுமென்று கோராத ஒரு இந்தியனும் கிடையாது.

இட். ஏன்?

இம். ஏனென்றால்-அவர்கள் எல்லாம் நம்மை வெறுக்கிறார்கள் !

இட். ஹீம் ! கொஞ்சம் பொறு, நான் இந்த பிரிடிஷ்காரர்களை முன்பு தோற்கடிக்கட்டும், பிறகு நான் இந்தியாவுக்குப் போய் - இந்த கருப்பு மனிதர்களை என்ன செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியும்.

இம். ஆனால், நான் சொன்ன இந்த இந்தியன், நம்மைவிட வெண்மையாயிருக்கிறான் - அவனுடைய புகைப் படத்தைப் பார்த்ததில்-அதை என்னுடன் கொண்டு வர மறந்தேன்-நான் உங்களுக்கு அதை நாளேக்குக் காண்பிக்கிறேன்.