பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.மூன்றாம் அங்கம்
****

இடம் - திருவொற்றியூரில் விஸ்வநாதத்தினுடைய புதிய வீட்டில், ஓர் அறை. விஸ்வநாதம் எழுதும் மேஜையின் எதிரில் ஓர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு ஒரு தந்தியை வாசித்த வண்ணம் இருக்கிறான்.

வி. (படிக்கிறான்) “ஈஸ்வரன் கருணை - மிகவும் சந்தோஷம் புறப்பட்டு விட்டேன். வியாழன் வெள்ளி வந்து சேர்கிறேன்.” - அப்படியானால் இன்றைக்காவது, நாளைக்காவது வந்து சேரவேண்டும்- என்ன நேர்ந்த போதிலும் இந்த சாவுகார் பிசாசின் உபத்திரவம் நீங்கியிருப்பேன்! - அவன் கடைசியில் என்ன கொடுப்பதாய் சொன்னான் ? - (வேறொரு கடிதத்தைப் பார்த்து) - ஐந்து லட்சம்!

(வெளியில் ஒரு மோடார் பெரும்நாதம் கேட்கிறது)
 

வி. ஏதோ கஷ்டம் நேரிடப்போகிறது! ஏதோ அபாயம் வந்திருக்கிறதென என மனதிற்குள் தோன்றுகிறது.

(ஒரு வேலையாள் வருகிறான்)
 

வி. யார் அது ? சாவுகார் அல்லவே?

வே. இல்லைங்க - ஒருத்தர் வந்திருக்கராருங்க - ரெண்டு வண்டியிலே! இந்த கார்டை கொடுக்கச் சொன்னாரு உங்ககிட்ட.

வி. ஒருத்தர் வந்திருக்கிறார் - இரண்டு வண்டியில் (கார் டைப் படித்து) ‘கில்லிங்காம், 32 சாலைத் தெரு, நியுயார்க்! - “கில்விங்காம்! இது யார்? எனக்கு தெரியவே தெரியாதே! - ஓ! இதோ - ஏதோ பென்கிலில் கிறுக்கியிருக்கிறது - மிஸ்டர் வென்ட்வொர்க் அனுப்பினார்” - ஓ! பையா - அவரை உடனே வரச் சொல் இங்கு. (வேலையாள் போகிறான்). வென்ட்வொர்த்துக்கு என்ன ? தானே வருவதாகத் தந்தி அனுப்பினாரே அவர் வேறொருவரையும் அனுப்பியிருக்கமாட்டாரே -இவ்விஷயத்தில் ?

கில்லிங்காம் வருகிறார்.