பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23கி. குட் மார்னிங் !-நான் இன்னானென்று நானே என்னைத் தெரிவித்துக் கொள்ளவேண்டியதிருக்கிறது. நான் நியுயார்க்கிலிருந்து வந்திருக்கிறேன். தங்களுடைய சிநேகிதனை வென்ட்வொர்த்தின் நெருங்கிய தாயாதி. மிஸ்டர் விஸ்வம் - க்ஷேமந்தானே?(அவன் கையைப்பற்றி குலுக்குகிறான்), மிஸ்டர் வென்ட்வொர்த் என்னை முன்பாக அனுப்பினர்.

வி. ஏன்?- வென்ட்வொர்த் தானாக ஏன் வரவில்லை ?

கி. அதை உமக்குக் கூறவே என்னை முன்பு அனுப்பினார் - இங்கு நாம் - தாராளமாய்ப் பேசலாமா ?

வி. தாராளமாய்.

கி. வென்ட்வொர்த்தும்-நானும்-இன்னும் இரண்டுபெயரும்-மிகுந்த வேகமாய்ச் செல்லக்கூடிய ஒரு எய்ரோ பிளேனில் வந்துகொண்டு இருந்தோம். - வரும் வழியில்-போர்ட்செய்ட் அருகில் பாழாய்ப்போன ஜெர்மன் பிளேன் எங்களே எதிர்த்தது. இந்த கேடுகெட்ட பாவிகளுக்கு நாங்கள் இங்கு வந்துகொண்டிருக்கிறோமென்று எப்படி தெரிந்ததோ அது ஈஸ்வரனுக்குத் தான் தெரியும். - எங்கள் விமானம் சேதப்பட்டது வென்ட்வொர்த்துக்கு - காயம்பட்டது மார்பில் - தெய்வாதீனமாய் ஹீருதயத்தில் காயம் படவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை செய்யப்படுகிறார் - டாக்டர் படுக்கையை விட்டு அசையக் கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறார் - நீங்கள் ஒன்றும் பயப்படாதீர்கள் - ஒரு வாரத்திற்கெல்லாம் அவர் ஸ்வஸ்தமாய் விடுவார் - ஆகவே அவர் என்னை முன்பு அனுப்பினார் - உங்களைப் பார்க்கும்படி - நீங்கள் புதிதாய்க் கண்டு பிடித்திருக்கும் இரக்சியத்தைப் பற்றி

வி. அதைப் பற்றி -அவரிடமின்றி - வேறொருவரிடமும் தான் பேசுவதற்கில்லை - அதுவும்

கி. பயப்படாதீர்கள் - நான் அவருடைய பந்து தாயார் பக்கம்-அமெரிக்காவில் இரகசிய ராணுவத் தொழிலைச் சேர்ந்தவன் நான் (வெளியில் தூரத்திலிருந்து ஒரு விசில் (Whistle) சப்தம் கேட்கிறது)-இதோ