பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

லட்சம் பொன் தருகிறேன், எல்லாம் பொன் நாணயமாக !- காகித நோட்டுகளல்ல - அந்த ரகசியத்தைச் சொல்லாவிட்டால் - உன்னை உடனே சுட்டுக்கொல்வேன் - உனக்கு இரண்டு நிமிஷங்கள் கொடுக்கிறேன் - உனக்கு இஷ்டமானதைச் செய்.

வி. எனக்கு-இரண்டு-நிமிஷங்கள் வேண்டாம்.

கி. அதுதான் சரி! - சொல்லிக்கொண்டு போ! - (ஜோபியிலிருந்து ஒரு நோட் புஸ்தகத்தையும் பென்சிலையும் எடுக்கிறான்).

வி. நான் வேண்டுவதெல்லாம் - சில வினாடிகள் தான் என்னைச் சுட்டுக்கொல் ?

கி. என்ன ! நீ எனக்கு-இதை சொல்லப்போகிறாயென்றல்லவோ பார்த்தேன் !

வி. ஒருபோது மில்லே !

கி. (ஏளனமாய் நகைத்து) ஹீம்! உனக்கு கொஞ்சம் தைரிய மிருக்கிறது! - இந்தியர்கள் முக்கியமாக தென் இந்தியாவிலுள்ளவர்களே - பயங்காளிகள் என்று சொன்னார்களே, எனக்கு!

வி. சொன்னவன் மடையன் - பொய் சொன்னான்!- உன் வேலையை சீக்கிரம் முடி.

கி. விஸ்வம்-பயித்தியக்காரனாயிராதே! நான் சொன்னபடி செய்து தீருவேன் - முதல் முறை உன்னைக் கேட்கிறேன்-சொல்கிறாயா ? மாட்டாயா ?

வி. நான் உனக்கு பதில் சொல்கிறேன். முதல் முறை, இரண்டாம் முறை, மூன்றாம் முறை நான் சொல்ல மாட்டேன் - சுட்டுத் தள்ளிவிடு என்னை உடனே !

கி. உம் - இருக்கட்டும் - இந்த விதத்தில் நீ வழிக்கு வர மாட்டாய் ! எங்களுடைய கெஸ்டபோ போலீஸ் உனக்கு என்ன செய்வார்கள் என்பதை நீ அறியாய்! உன்னை நான் சுடப்போகிறதில்லை.

வி. நீ சொன்னபடி செய்கிற மனிதன் என்று சற்று முன்பாகக் கூறினாயே!

4